Header Ads



நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசாங்கம் கோட்டாபயவுக்கு அறிவிப்பு - இன்றும் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 2 வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபயவை நாட்டுக்குள் அனுமதித்தமைக்கு எதிராக சனிக்கிழமை (16) எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தின் அமைச்சரொருவர் கோட்டாவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரியவருகிறது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னர் மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டா, அங்கிருந்து கடந்த 13ஆம் திகதி சிங்கப்பூருக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. இந்த செய்திகளைப் பார்க்கும்போது அவருக்கு மிகவும் பாதுகாப்பான இடம் வெலிக்கடை சிறைச்சாலை மட்டும்தான். நிரந்தரமாக ஒரு அறையை அங்கு செய்து கொண்டால் பிரச்சினை முடிந்தது.

    ReplyDelete

Powered by Blogger.