Header Ads



இலங்கையில் உணவுப் பஞ்சத்தினால் சாப்பிடாமல் நித்திரைக்கு செல்லும் குழந்தைகள் - அவசரமாக உதவுமாறு யுனிசெப் கோரிக்கை


இலங்கையில் காணப்படும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் குழந்தைகளின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை யுனிசெப் கோருகிறது

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டிலுள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் சுமார் அரைவாசிப் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலை காணப்படுகிறது என யுனிசெஃப் இலங்கை பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,..

அடுத்த நான்கு மாதங்களுக்குள் அதிகமாக பாதிக்கப்படக் கூடிய மக்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வேண்டுகோளை ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ளது. அடுத்த ஏழு மாதங்களில் குழந்தைகளின் அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் அளவை அதிகரிக்க பொறுப்பேற்க வேண்டும். இலங்கையிலுள்ள 1.7மில்லியன் பாதிக்கப்பட கூடிய குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றும் ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் மனநல சேவைகளை வழங்கவும் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை தற்போது யுனிசெஃப் கோரியுள்ளது.

குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெறும் வயிற்றில் நித்திரைக்கு செல்கின்றனர். பல குழந்தைகள் தினமும் பாடசாலைக்கு சமுகமளிப்பதில்லை. மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாருக்கான மருந்துகள் மருத்துவமனையில் வேகமாக முடிவடைகின்றன. இப்போது நாங்கள் செயற்படவில்லை என்றால் அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட நேரிடும்.

தற்போதைய நெருக்கடிக்கு முன்னதாகவே தெற்காசியாவில் இலங்கை அதிக ஊட்டச்சத்து குறைப்பாடு விகித கணக்கெடுப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இலங்கையில் 05 குழந்தைகளில் 02 குழந்தைகளுக்கு போதுமான அளவு குறைந்தபட்ச உணவு வழங்கப்படுவதில்லை. உயர்ந்துவரும் உணவு பொருட்களின் விலையின் காரணமாக 70 வீத குடும்பங்களின் உணவு நுகர்வு குறைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு குழந்தைகளுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய சேவைகளை தடுக்கின்றது. குடிப்பதற்கும், வீட்டுப் பாவனைகளுக்கும் பாதுகாப்பான நீர் கிடைப்பது குறைந்து வருவதால், நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது.

தற்போதைய நெருக்கடி, வறுமை, கோவிட்19 தொற்று மற்றும் தொடர்ச்சியான காலநிலை சீர்க்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமிகளை மேலும் பாதிக்கின்றது.என்று ஸ்கூக் தெரிவித்துள்ளார். யுனிசெஃப் அதன் மனிதாபிமான வேண்டுகோளின் மூலம் இலங்கை குழந்தைகளுக்கு ஆதரவளிக்க நன்கொடையாளர்களை வலுவாக வலியுறுத்துகிறது.

No comments

Powered by Blogger.