Header Ads



நாடு அழிவின் விளிம்பிற்கே வந்துள்ளது - இம்தியாஸ் Mp


 பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற இன்றைய (12) ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.

நான் இன்று கருத்துரைக்க நினைப்பது என்னவென்றால் ஐக்கிய நாடுகள் சபை எமது நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் வேண்டுகோள்களை நோக்கிய அவதானத்தை உண்டுபண்ணுவது தொடர்பிலாகும்.

எமது நாடு வரலாற்றில் என்றும் இல்லாத வண்ணம் பல சிரமங்களுக்கு எனது நாடும் நாட்டு மக்களும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையானது இவ்வாறான வேண்டுகோளை விடுத்து எமது நாட்டு விடயத்தில் தலையிட வேண்டி ஏற்பட்டது ஏன்? அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்ன? எமது பிரதமர் அவர்கள் கடந்த தினம் பாராளுமன்றத்தில் ஓர் கருத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறினார், “உலக நாடுகள் முன்னிலையில் நாம் இழிவான நிலைமைக்கு உள்ளாகியுள்ளோம்.”இதை தெரிவித்தது நானல்ல பிரதமரே.

மேலும் “எமது சம்பிரதாய நண்பர்கள் எம்மை விட்டும் தூரமாகி உள்ளனர்” என்று அறிவித்தார். அதேபோன்று அத்தகைய நாடுகளில் ஜப்பான் போன்ற நாடுகளை உதாரணம் காட்டினார். “அவற்றை மீள கட்டியெழுப்புவதற்கு எமக்கு பல சவால்கள் காணப்படுவதாகவும்” தெரிவித்தார். இவ்வாறான நிலைமைக்கு எமது நாடு தள்ளப்பட்டதன் காரணம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.ஆனால் இவ்வாறான நிலைகளை நோக்கி விரல் நீட்டிக் கொண்டிருக்கும் காலம் அல்ல இது. எமது மக்கள் வாழ்வது கடுமையான போராட்டத்தின் மத்தியிலேயாகும். கண்ணீருடன், கவலையுடன், பாரிய ஏமாற்றத்துடன் இவற்றுக்கு மேலாக அவநம்பிக்கையுடனே எம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையை எடுத்துக் காட்டுவதற்கு நான் விரும்புகிறேன். இன்று சில ஆங்கில பத்திரிகைகளில் முகப்பக்கம் இத்தலைப்பினை கொண்டிருந்ததை நான் அவதானித்தேன். என்னிடம் ஓர் ஆங்கிலப் பத்திரிகை காணப்படுகிறது. இப்பத்திரிகையின் ஆரம்ப பக்கத்தில் தலைப்பு செய்தியாக இவ்விடயமே குறிப்பிடப்பட்டுள்ளது. Nearly 5 Millon in Hunger கிட்டத்தட்ட 50 இலட்சம் மக்கள் பசி பட்டினியில் வாடுகின்றனர் என்பதாகும். 56 இலட்சம் சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டை சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்கள்,அதிலும் இரண்டு இலட்சம் கொழும்பு வாழ் மக்கள் உணவு பற்றாக்குறையினால் தமது நகைகளை விற்று பணத்தைப் பெற்றுக் கொள்கின்றார் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.

நாம் அரசியல் இலாபத்துக்காக இதைக் கூறவில்லை. நாம் உலக நாடுகள் முன்னிலையில் மிக தாழ்ந்த மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.அபிவிருத்தி அடைந்தாக காணப்பட்ட எமது நாடு ஒரு காலகட்டத்தில் நடுத்தர வருமானம் பெரும் நாடாக மாறியது, இன்று பிச்சை கேட்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளது.எமது நாட்டின் இந்த பின்னடைவிற்கு எமது ஆட்சியாளர்கள் வழங்கும் பதில்களை பாருங்கள்,  உலகில் எல்லாக் காலங்களிலும் எமக்கு உதவி செய்த நண்பர்கள் பதில் அளிக்காமல் உள்ளனர்.இதை நான் கூறவில்லை பிரதமர் அவர்களே தெரிவித்தார். எமது சம்பிரதாய நண்பர்கள், உலகின் பலமான நாடுகள் எமது கோரிக்கைகளுக்கு பதிலளிலிக்காதுள்ளனர்.

கடைசியில் நாடென்ற ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக உலக நாடுகளுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலைமைக்கு காரணம் என்ன?நான் மென்மேலும் பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை மேற்கோள் காட்டுகிறேன். 5 வயதுக்குட்பட்ட 56 ஆயிரம் சிறுவர்கள் ஊட்டச்சத்தினான உணவு உட்கொள்ளாததால் கடுமையான போசனை குறைபாட்டை சந்தித்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. 2021 இல் திரிபோச விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியது. சிறுவர்களுக்கு வழங்கும் விட்டமின் வகைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் போசனை மருந்து வகைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளது தொடர்பாக  குடும்ப அமைப்புகளின் தலைவர் தெரிவித்திருந்தார். 

ஆனால் இவை தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளாக மிகப் பிரதானமாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாட்டின் மிகப் பிரதானமான எதிர்க்கட்சியென்ற வகையில் நாம் சுட்டிக்காட்டினோம். ஆனால் அவர்களது பதிலாக அமைந்தது என்னவென்றால், “மக்களை குழப்ப வேண்டாம் நாட்டில் அவ்வாறானதொரு பிரச்சினை இல்லை நாட்டை அபிவிருத்தி செய்ய பணம் இருக்கிறது” என்றனர்.நான் அரசியலைக் கொண்டு இதைக் குறிப்பிட விரும்பவில்லை. உமக்கு இவற்றை பாராளுமன்றத்தில் பேசியவர்கள் யார் என்பது நினைவில் வரும். பொறுப்பு சொல்ல வேண்டிய அமைச்சர்களே அவ்வாறு பேசினார்கள். மக்களை ஏமாற்றினார்கள் இன்று மீளமுடியாத அழிவை நாம் சந்தித்துள்ளோம். 

இவ்வாறான அழிவை சந்தித்ததன் பின்னரும் அரசாங்கம் இதற்கு பதிலளிப்பது, அரசியல் ரீதியான தீர்வுகள் தேவையில்லை அவற்றை பின்னர் பெற்றுக்கொள்ளலாம் இப்போது மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர் அவற்றை பற்றி முதலில் பேசுவோம் என்கிறது.ஏன் இவ்வாறு கூறுகின்றனர்.அவர்களுக்குள்ளாலே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் ஒன்றினைந்து 21 ஆவது சீர்திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்கும் போது அமைதி காக்கின்றனர்.அன்று தினம்தோறும் ஊடக சந்திப்புகளை ஏற்பாடு செய்து, பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக 21 ஆவது சீர்திருத்தம் தொடர்பாக பேசினோர்கள். இன்று இவர்கள் வீர வசனமும் பேசா முடியாமல் வாய்மூடி மௌனித்திருக்கிறார்கள்.எமது அமைச்சர்கள் ஜனநாயக ரீதியாக நடந்து கொண்டார்கள் என்பதை கான்பிக்க முயற்சித்தனர்.கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசிப்பதாக தெரிவித்தார்கள். நாளை அமைச்சரவைக்கு  சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்கள்.முடிவுகள் தீர்ப்புகள் வழங்கப்படவில்லை.குப்பை அரசாக மாறியுள்ளது.ஒவ்வொரு பக்கத்திற்கு இழுக்கும் கரத்தையை போன்று மாறியுள்ளது இந்த அரசாங்கம்.இவற்றையும் கணக்கில் எடுப்பதுமில்லை.பதிலளிப்பதுமில்லை.

நான் நேற்று இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் அமைப்பினர் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் சந்திப்பில் பங்கேற்றேன்.நாட்டில் இன்று காணப்படுகின்ற அரசியல் சமூக பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு அவர்கள் வழங்கும் ஆலோசனை உள்ளடங்கலான அறிக்கையை சமூகமயமாக்கும் வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவ் வைபவம் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது நான் முழுமையாக அதை செவிமடுத்தேன். பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நாடு தொடர்பான அழுத்தமும் ஏமாற்றங்களும் அவ்வுரைகளில் காணப்பட்டன. ஓய்வு பெற்ற சில அதிகாரிகள் பேசும் பொழுது எமது உள்ளங்களுக்கு விளங்குகிறது, அவர்களுடைய பிள்ளைகள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் ஆனால் நாட்டின் நிலைமை தொடர்பாக அவர்கள் வருந்துகிறார்கள் என்பது புலப்பட்டது.

ஆனால் இதற்கு பதில் கூற வேண்டியவர்கள் கூறுவதென்றால் பசிக்கு தீர்வொன்றை தாருங்கள் மருந்துகளை வரவழைப்பதற்கு உதவி செய்யுங்கள் அவ்வாறு அல்லாமல் அரசியல் ரீதியான தீர்வுகள் தொடர்பாக பேச வேண்டாம் என்கின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகள் ஏன் ஏற்பட்டது. அரசியல் ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இரண்டும் ஒருசேர நோக்கப்பட வேண்டும். உலக நாடுகள் ஜப்பான்,அதேபோன்று எமது நேச நாடுகள் எம்மை கைவிட்டுள்ளதென  பிரதமர் கூறும்பொழுது இந்நாடுகள் ஏன் எம்மை கைவிட்டுள்ளது என சிந்திக்க வேண்டும். பிழையான தீர்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் மாத்திரமல்ல முகமூடி அணிந்த நிலையில் புதிய ஒரு முகத்தை காட்டும் இந்த அரசை,இல்லை அந்த பழைய அரசின் முகம் தான் இது என்பதையும் இவர்கள் போலியாக நடிக்கிறார்கள் என்பதையும் உலகு உணர்கிறது.

மனித உரிமைகள் மீறப்படுவது, கொலை, கொள்ளை, ஊழல் ஊடாக எமது கௌரவத்தை இல்லாதொழித்து அரசு அது.2015 ,2019 கால ஆட்சியில் ஊழல் மோசடிகளை மீளப் பெறுவதற்கான ஓர் சபையை நிறுவியிருந்தது நமக்குத் தெரியும். இன்று வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில் ஆசிரியர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை நான் வாசித்துக் காட்ட விரும்புகிறேன். “2015, 2019 காலகட்டத்தில் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகள் நடைபெற்று அவை இடைநடுவில் நிறுத்தப்பட்டன” ஏன் அரசியல் உடன்படிக்கைகள் கொடுக்கல் வாங்கல்களே இதற்குக் காரணமாகும்.இக் கொடுக்கல் வாங்கல்கள் இன்று தெளிவாக விளங்குகின்றன. இவ்வாறு இந்நாட்டை பயணிக்க விடமுடியுமா? நாட்டிற்கு அன்பு செலுத்தும் மக்களுக்கு அமைதி காக்க முடியுமா? கைகாட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? நாடு அழிவின் விளிம்பிற்கே வந்துள்ளது? உலகு அரசை நோக்குவது கடந்த அரசின் தொடர்ச்சியாகவே. இவ்வாறு பயணிக்க விட முடியுமா? என்று நான் கேட்கிறேன்.

இன்று உலகில் எந்த ஒரு  கோட்பாட்டிற்கும் ஏகபோகமில்லை நாம் தான் சரி என்ற நிலைப்பாடில்லை. சீனா தனது நிலைப்பாட்டை மாறியுள்ளது. அமெரிக்கா மாறி உள்ளது, உங்களுக்கு தெரியும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பேர்னி சென்டர்ஸ்,ஒகாஸியா போன்றவர்கள் தோன்றினார்கள்.வாழையடி வாழையாக முதலாளிகளுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணங்கி இரண்டு தசாப்தங்களாக பாராளுமன்றம் சென்றவர்களை முறியடித்து புதிய இளைஞர் சக்தி தலைதூக்கியது. 

அக் காலத்தில் சமூக நீதி, சமூக ஐக்கியம் என்று பேசும் பொழுது அந்த சமூகத்திற்கு அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலாளித்துவத்தை அவர்கள் பெற்று இருந்தார்கள்.ஆனால் அவர்கள் தமது கருத்துக்களை மாற்றிக் கொண்டனர். உலக பூராகவும் மாற்றங்களை காண்கிறோம்.  இன்று பைடன் ஆட்சிக்கு வந்தது ஸன்டஸ் ஒகாஸியோ போன்ற புதிய தலைமுறை புதிய சிந்தனையிலாகும். நாம் இவற்றை உணர வேண்டும்.இவ்வரசியல் கலாச்சார மாற்றத்தை மக்கள் வேண்டுகின்றனர்.அவர்களது வேண்டுகோளுக்கு செவிமடுக்காத அரசியல் சீர்திருத்தம் அவசியமில்லை. பொருளாதார பிரச்சினைக்கு வழங்குவதாக கூறிக் கொண்டு ஏமாற்றும் சமூகத்திலல்லவா நாம் வாழ்கிறோம். இதன் விளைவு என்ன?எமது சமூகத்தில் கல்வி அறிவு பெற்ற இளைஞர் சமூகம், நாட்டின் எதிர்காலத்திற்கு சாதகமான முறையில் பங்களிப்பு வழங்க முடியுமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை உருவாகியுள்ளது.இது ஓர் துரதிஷ்டமான நிலைமையாகும். 

காட்சிகளில் கோத்திர அமைப்பிலான கட்சி முறைமைகளே காணப்படுகின்றன. ஜனநாயகம் மற்ற கட்சிகளை காணப்படுகின்றன.சில குடும்பங்களும் சில பிரபுக்களும் அவ்வாறு இல்லை என்றால் அவர்களை ஆட்சி செய்பவர்கள் யார் என்பதை அறியாத மறைமுகமான சக்தி எது என்பதை அறியாத ஜனநாயகமற்ற கட்சிகளையே நாம் காண்கிறோம்.

நான் நேற்றைய கலந்துரையாடலிலும் குறிப்பிட்டேன் கட்சிகளுக்குள் காணப்படுகின்ற ஜனநாயகமற்ற நிலை இன்றைய நிலைமைக்கான காரணமாகும் என,ஏனென்றால் ஜனநாயகமற்றவர்களே பொறுப்புகளை பெருகிறார்கள், அவர்களே பொறுப்பு வகிக்கிறார்கள். அவ்வாறு இடம்பெற முடியாது.நாம் வாழ்வது ஜனநாயக சமூகத்தில் கட்சிகளுக்குள்ளாலும் ஜனநாயக ஒழுங்கு முறைக்கான சட்டங்களை கொண்டுவர வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். 

இரண்டாவது இன்று குரல் கொடுக்கும் இளைஞர்களுக்கு பாராளுமன்றத்தில் சந்தர்பபம் வழங்கப்பட வேண்டும்.அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடங்களில் அவர்கள் வீற்றிருக்க வேண்டும்.  பாராளுமன்றத்தில் இளைஞர்களுக்கு 25 வீதமான இட ஒதுக்கீட்டை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி ஒரு தீர்மானத்தை மேற்கொண்டது. 


பிரேமதாஸ அவர்கள் எண்பத்தி ஒன்பது கிளர்ச்சிக்கு பின்னால் இளைஞர் அமைப்பின் ஆலோசனைகளுக்கு அமைய 40 விதமான இளைஞர் பங்களிப்பை உள்ளூராட்சி ரீதியான ஆட்சிக்கு வழங்க வேண்டுமென்ற ஒரு ஆலோசனையை கொண்டு வந்தார். உள்ளூராட்சி மாத்திரமல்ல பாராளுமன்றத்திலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளது. தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்வு இது. ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது சற்று சிரமமானது எவ்வாறிருந்தாலும் இது கண்டிப்பாக இடம் பெறவேண்டிய ஒன்றாகும். தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடங்களில் அவர்களுகளது குரல்கள் ஒழிப்பதற்கான அவகாசம் வழங்கப்பட வேண்டும். 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆலோசனைக்கு இணங்கலாக நான் தனிநபர் பிரேரணையை முன் வைத்துள்ளேன்.

முதலாம் வாசிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்போது அது வர்த்தமானியில் வெளுயுடப்பட்டுள்ளது.இவற்றை இழுத்தடிப்பதற்கும் ஒடக்குவதற்கும் அரசுக்கு முடியும். சட்டமா அதிபர் திணைக்களம் இதற்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளது. இளைஞர்களுக்கு தமது குரல்களை எழுப்புவதற்கான அவகாசத்தை வழங்குங்கள்.   கோத்திர அரசின் மூலஙமோ, கோஷங்களை எழுப்பும் அரசியலின் மூலமோ,நட்பு அரசியலின் மூலமோ மென்மேலும் நாட்டை முன்னேற்ற முடியாது.சுதந்திரத்துக்குப் பின்னால் ஐந்து தசாப்த காலங்களாக நாம் பயணித்தது வன்முறையுடனேயே.மேலும் இவ் வன்முறையுடன் பயணிக்க முடியாது.இவ்வாறான பிரச்சினைகள் ஊடாக ஓர் நல்ல விடயத்தை காண்கிறேன். மக்கள் ஜனநாயகத்தை பயன்படுத்துவதற்கு தமக்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் சரியான தீர்வுகளை பெறுவார்கள் என நினைக்கிறேன். மக்கள் படிப்பினை பெறுகிறார்கள் இதுவே இங்கு காணப்படும் அனுகூலமான விடயமாகும்.

இறுதியாக ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

பாராளுமன்றத்தில் மின்சாரம் தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்ட போது ஐக்கிய மக்கள் சக்தியானது பாரிய வேலைத்திட்டங்களை கொண்டு வரும் வழங்கும்போது கண்டிப்பாக விலைமனு கோரல் வழிமுறைகளை பின்பற்றுமாறு திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. நேற்று முன்தினம் நான் ஓர் விடயத்தை கண்டேன். அது பாராளுமன்ற நிதிக் குழுவிலே ஓர் அமைச்சரவையின் பிரதானமான அதிகாரியொருவர்,எமது நாட்டின் அரச தலைவர் அவரை அழைத்து இந்த திட்டத்தை விலைமனு கோரல் இல்லாமல் வழங்குமாறு  வற்புறுத்தியதாக குறிப்பிடுகிறார். எமது அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டை நினைத்துப் பாருங்கள்.அதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அதற்கு அடுத்த தினம் குறித்த அதிகாரி தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கிறார். எமது நாட்டின் பிரதானிகள் இவ்வாறே செயல்படுகிறார்கள்.

டட்லி சேனாநாயக்க அவர்கள் எனக்கு நினைவு வருகிறது.எமது நாடு மிகப் பிரதானமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்த வேளையில் சீனாவுடன் அரிசி ரப்பர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா போன்ற பலம் நிறைந்த நாடுகள் சீனாவுடன் உடன்படிக்கையை கைச்சாத்திட்டால் மேற்கின் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம் என்று தெரிவித்தது. டட்லி சேனாநாயக்க அவர்கள் தெரிவித்தது என்னவென்றால் நாட்டின் நலனே எனக்கு பிரதானமானது என்று மிகப் பிரதானமான தீர்மானம் ஒன்றை எடுத்தார். இவ்வாறுதான் எமது தலைவர்கள் செயற்பட்டார்கள்.

எனக்கு நினைவிருக்கிறது பிரித்தாணியவிற்கு சமூகமளித்த வேளையிலே எல்லா தலைவர்களுக்கும் ஓர் கரத்தை வழங்கப்பட்டிருந்த வேலையில் வாகனம் குறைவாக காணப்பட்டதால் ஒரு வாகனத்தில் அரச தலைவர்கள் இருவருக்கு வருகை தருமாறு குறிப்பிட்டபோது டட்லி சேனாநாயக்க அவர்கள் எமது நாட்டிற்கு நீங்கள் வழங்கும் கௌரவம் இதுவென்றால் நான் திரும்பிப் பயணிக்கிறேன், உமக்கு நன்றிகள் என்று கூறினார்கள். அப்பொழுது அவர்களுக்கும் ஏனைய தலைவர்களைப் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. 

எமது நாட்டை இன்று அகௌரவப் படுத்தியுள்ளனர்.சரியான கோட்பாடு உள்ள அறிவு படைத்த நேர்மையான ஒரு குழு இந்நாட்டை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.எமது தலைவருக்கு ஐந்து வருடங்களுக்கு இந்நாட்டை மக்கள் அபிப்ராயத்துடன் ஒப்படைத்தால் நாட்டை மீட்டெடுப்பதாக தெரிவித்தார். இலகுவான காரணமல்ல அது.ஆனால் அவர்கள் முயற்சிப்பதும் அவர்களது கட்சியில் காணப்படுவார்கள் சர்வ கட்சி அரசை நிறுவுவதை இலக்காகக் கொண்டதாகும். இது  தொடர்பாக மக்களை அறிவூட்டுவதே இன்று எனது ஊடக சந்திப்பின் இலக்காக அமைந்தது என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.