Header Ads



செம்மணியிலிருந்து மனதை உலுக்கும் செய்தி...


செம்மணியிலிருந்து மீண்டும் ஒரு, மனதை உலுக்கும் செய்தி. UNICEF பை ஒன்றுடன் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. UNICEF குழந்தைகள் நலன் காக்கும் அமைப்பு. அதன் சின்னம், ஒரு குழந்தையின் எதிர்காலத்தை, கனவுகளை, பாதுகாப்பை நினைவூட்டும். ஆனால் இன்று, அது ஓர் அநாதைப் பிணத்துடன், ஒரு புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.


இது வெறும் எலும்புக்கூடு அல்ல. இது ஒரு குழந்தையின் உடல். ஒருவேளை, அந்த யுனிசெஃப் பையில் அதன் பொம்மைகள் இருந்திருக்கலாம், அதன் புத்தகங்கள் இருந்திருக்கலாம், அல்லது பெற்றோரின் அன்பின் அடையாளங்கள் இருந்திருக்கலாம். அந்த குழந்தை என்ன கனவுகளுடன் வளர்ந்திருக்கும்? என்ன விளையாட்டுகளை விளையாடியிருக்கும்? அதன் சிரிப்பு சத்தம் எங்கே சென்றது?


இந்த யுனிசெஃப் பை, ஒரு மௌன சாட்சி. அந்த அப்பாவி குழந்தை, உலகத்தின் கொடுமைகளை அறியாமல், யுனிசெஃப் பையுடன் தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால், அதன் வாழ்வு அநியாயமாகப் பறிக்கப்பட்டு, புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருக்கிறது. 


(நன்றி - சமூக ஊடகங்கள்)

No comments

Powered by Blogger.