Header Ads



CID பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்


(CID) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் (NPC) அனுமதியுடன் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


CID யின் பணிப்பாளராக இதற்கு முன்னரும் இப்பதவியில் இருந்த அவர், அரசியல் ரீதியாக பணியாற்றுவதாக 2019 தேர்தலைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதோடு, வழக்குகளை போலியாக ஜோடிப்பதாக தெரிவித்து 2020 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.


பின்னர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட அவர, 2021 இல் ஜூன் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்த திறமை மிக்க அதிகாரிகளில் ஒருவரான ஷானி அபேசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பதவியில் இணைக்கப்பட்டிருந்தார்.


புதிதாக உருவாக்கப்பட்ட குற்றவியல் புலனாய்வு பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் (Criminal Intelligence Analysis and Prevention Division) பணிப்பாளராக அவர் பதவிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.


இந்நிலையில் தற்போது CID பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.