அதிகாரிகள் சமுகமளிக்காததால் பதற்றமான நிலை
ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் ஆள் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு நேற்று திகதி வழங்கப்பட்டபோதும் அடையாள அட்டைகளை வழங்க அதிகாரிகள் இல்லாத காரணமாக ஆட்பதிவு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று (24) பதற்றம் ஏற்பட்டது.
ஒரு நாள் சேவையின் கீழ் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள நேற்று திகதி ஒதுக்கப்பட்ட மக்கள் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்தனர்.
இருப்பினும் அட்டைகளை வழங்குவதற்கு அதிகாரிகள் கடமைக்குச் சமுகமளிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே நேற்று அங்கு ஒரு பதற்றமான நிலை காணப்பட்டது.
Post a Comment