Header Ads



இப்படி ஒரு நெருக்கடி ஏற்படும் என, நான் கற்பனை பண்ணியதே இல்லை - ரணில்


இலங்கையில் தற்போது பொதுமக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பெரும் கவலைக்குரிய விடயமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் என்னதான் நெருக்கடிகள் இருந்தபோதும் பொதுமக்கள் ஒருபோதும் உணவுக்கும் எரிபொருளுக்கும் இவ்வாறான தட்டுப்பாடுகளை எதிர்கொண்டதில்லை.

தற்போது பொதுமக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போதைய நெருக்கடி யாரும் எதிர்பார்த்திராதது. இப்படியான ஒரு நெருக்கடி ஏற்படக்கூடும் என நானும் கற்பனை பண்ணியதே இல்லை. ஆனால் அந்தளவு மோசமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

நான் முன்னர் ஆளுங்கட்சியாக இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பொதுமக்கள் தட்டுப்பாடின்றி மூன்று வேளை உணவைப் பெற்றுக் கொள்வதற்கான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி இருந்தேன்.

இம்முறையும் அவ்வாறான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி பொதுமக்களின் நெருக்கடிகளை தணிப்பதே எனது ஒரே இலக்கு” என தெரிவித்துள்ளார். TW

No comments

Powered by Blogger.