Header Ads

புதிய அமைச்ரவையில் பழைய கழுதைகளே உள்ளன - பசிலிடம் றிமோர்ட் கொன்றோல், பழி தீர்த்தார் ரணில் - நளின் Mp


 எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(25) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த தெரிவித்த கருத்துக்கள்.

தற்போது ராஜபக்ஸ ஆட்சியை மக்கள் முற்றாக நிராகரித்து வருகின்றனர்.கோட்டாபய ராஜபக்ஸவும் ராஜபக்ஸ குடும்பமும் நான்கு சுவருக்குள்  அடைபட்டிருந்த வேளையில் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தின் மீட்பாளராக வந்தார்.தற்போது சர்வகட்சி ஆட்சியே அமைக்கப்பட்டுள்ளது என்று யாராவது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகும். இது நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசாங்கம் அல்ல. ஒன்பதாம் திகதிக்கு முன்னர் இருந்த நிலையிலிருந்து ராஜபக்சக்களை பாதுகாக்கவே இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

நாட்டில் உள்நாட்டுக் கிளர்ச்சியும், மக்கள் போராட்டமும் நடைபெற்று வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்தன. இதிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என ராஜபக்ஸர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு ரணில் விக்கிரமசிங்கவை மீட்பாளராக தேர்ந்தெடுத்தனர். 2015-2019 ஆட்சிக் காலத்திலும் ராஜபக்ஸ குடும்பத்தை ரணில் விக்கிரமசிங்க தான் காப்பாற்றினார் என்ற உண்மையை இந்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருப்பதால் இது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை என்று யாராவது சொன்னால் அதுவும் அப்பட்டமான பொய்யாகும். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அலுவலக உதவியாளர் பதவி போல் பிரதமர் பதவியை ஏற்க முடியாது. இன்னுமொரு விடயம் தான் மாசக்கணக்கில் நாம் இது குறித்து பின்வாங்கவில்லை.இரண்டு நாள் பிரச்சினையையே இவர்கள் பெரிதாக பேசுகின்றனர். நாம் ஒரு அரசாங்கத்தை பொறுப்பாக ஏற்றுக்கொண்டால் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளும் நிலை இருக்க வேண்டும்.பொறுப்பு இல்லாத அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.சஜித் பிரேமதாஸ செய்தது பொறுப்புக் கூறலுடன் செயற்பட்டதுதான்.

நாங்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தோம்,மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதகுருமார்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தோம்,சிவில் ஆர்வலர்கள் மற்றும் காலி முகத்திடல் போராட்ட இளைஞர்களுடன்  கலந்துரையாடிக்கொண்டிருந்தோம்.சுமார் 48 மணித்தியாலங்கள் தான் கடந்தன.அரசியலமைப்பின்படி அந்த வாய்ப்பை முதலில் கோட்டாபய 

ராஜபக்ஸ பிரதான எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும். இது முடியாது என பிரதான எதிர்க்கட்சி கூறினால் அடுத்து வழங்கப்பட வேண்டிய கட்சிகள் பல உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் உள்ளது.

இன்று ராஜபக்ஸவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று சிஐடிக்கு சமூகமளித்தார். ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியதை நாங்கள் காணவில்லை. மகிந்த ராஜபக்ஸ 9 ஆம் திகதி ஒழிந்திருந்தவர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணத்துடன் ஹெலிகாப்டர் மூலம் இன்று அதிக பயணங்களை மேற்கொள்வதை நாம் காண்கிறோம்.ஆனால் அவர் நாட்டின் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இல்லை என்பதால் அதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை.ரணில் விக்கிரமசிங்கவினால் தான் அவருக்கு ஒட்சிசன் கிடைத்தது.

அதனால்தான் நாங்களும் சஜித் பிரேமதாசவும் இது நாட்டுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கம் அல்ல என்று கூறினோம். இது சர்வ கட்சி ஆட்சியல்ல.நாங்கள் இணக்கம் கண்ட சர்வகட்சி அரசாங்கத்தில் பதினைந்து அமைச்சுக்கள் மாத்திரம் தான்.இராஜாங்க அமைச்சுகளோ பிரதி அமைச்சுகளோ  தேவையில்லை என இணக்கம் கண்டிருந்தோம். எனினும் இன்று அமைச்சரவை அமைச்சுக்கள் பல உள்ளன.இதில் புதிய அமைச்சர் யார்?எங்கள் கட்சியின் ஒரு தம்பதியினர் போய்விட்டார்கள்.அது தவிர ரொஷான் ரணசிங்க மாத்திரமே புதிய அமைச்சரவை  அமைச்சர்.

ஏனைய கழுதைகள் எல்லாம் பழைய கூட்டத்தின் கழுதைகள் தான.இதை சர்வதேச சமூகமும் ஏற்கவில்லை. இந்த அரசாங்கம் உண்மையான சர்வகட்சி அரசாக இருந்திருந்தால் குறைந்தது ஆறு மாதங்களாவது மக்கள் பொறுமை காப்பார்கள்.

இன்று மக்களால் வாழ முடியாது. எரிபொருளின் விலை 400 ரூபாவிற்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.மங்கள சமரவீர இரண்டு ரூபாவினால் உயர்த்தப்பட்டபோதும் துவிச்சக்கர வண்டியில் வந்தவர்கள் இன்று  111 ரூபாவால் அதிகரித்து தற்போது ஹெலிகப்டரில் செல்கின்றனர். எனவே, இது ஒரு தீவிரமான நிலைமையாகும். நாட்டில் வேலை இழப்பவர்கள் அதிகரித்து வருகிது.கடுமையான உயிர்வாழ்வு பிரச்சினையை எதிர்கொள்வார்கள்.

ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளதாக இன்று காலை அறியக்கிடைத்தது. பிரதமராகப் பதவியேற்று பத்து நாட்களுக்கும் மேலாகிறது, அந்த 10 நாட்களில் ஒருமுறையேனும் கூட மத்திய வங்கி ஆளுநரை பிரதமர் சந்தித்தாரா? தெரிந்தளவில் இல்லை.என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.ஏதோ பிரச்சினை ஒன்று உள்ளது. மத்திய வங்கியின் ஆளுநருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாக நாம் அறிந்ததே. 2015 இல் நடந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நிதியமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்கவின் மத்திய வங்கி தொடர்பில் என்ன கொள்கைகள் உள்ளன? கலாநிதி நந்தலால் வீரசிங்க தொடர்பான புதிய பிரதமரின் நிலைப்பாடு என்ன? தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முதல் பலியாக நந்தலால் வீரசிங்க இருப்பாரா என்ற கேள்வி நம் இதயத்தில் உள்ளது. அவர் மிகவும் திறமையான அதிகாரி, யாருக்கும் அடிபணியாத சுதந்திரமான அதிகாரி. எனவே, மத்திய வங்கிக் கொள்ளையர்களைப் பிடிக்க வந்த மஹிந்த ராஜபக்ஸ இப்போது ஒன்றாக அமர்ந்து மீண்டும் மத்திய வங்கியில் 2015 ஆம் ஆண்டு கொள்ளையைப் போன்ற ஒரு கொள்ளையையா நடத்தப் போகிறாரா என்ற கேள்வி எமக்கு உள்ளது. திறமையான இந்த அதிகாரிகளைத் தாக்கப் போகிறாரா என்ற கேள்வி எமக்கு உள்ளது. எனவே, மத்திய வங்கி போன்ற ஒரு நிறுவனம் அரசியலில் இருந்து விடுபட்ட சுதந்திரமான நிறுவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் மரியாதையுடன் கூறுகிறோம்.

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக இந்நாட்டின் இளைஞர்கள் கூறியவற்றிற்காக நாங்கள் முன்நிற்கிறோம்.  21 ஆவது திருத்தச் சட்டம் முதலில் அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட போதிலும் பசில் ராஜபக்ஸவின் தலையீட்டினால் அமைச்சரவையில் நிறைவேற்றப்படவில்லை.கோட்டாபய ராஜபக்ஸ ஒரு ஒட்டுண்ணி, இந்நாட்டில் என்ன நடக்கிறது என்று அறியாத கோழை என்பதை நாம் அறிவோம்.

தொலைக்காட்சி பார்ப்பதில்லை, பத்திரிகை பார்ப்பதில்லை, முகநூல் பார்ப்பதில்லை, இப்படிப்பட்டவர் தான் கோட்டா.பசிலின் ரிமோட்டில் இயங்க நாங்கள் தயார் இல்லலை.அவ்வாறு இயங்கினால் மீண்டும் இந்நாடு ஆபத்தில் தான் விழும்.இந்த அரசு மிக குறுகிய காலத்தில் இன்னொரு நெருக்கடியை சந்திக்க நேரிடும்.தற்போதைய போராட்டத்தை விட பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிவரும். ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த நாங்கள் தயாராக இல்லை.

கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் அமைச்சரவையை அமைக்க நாங்கள் தயாராக இல்லை. எனவே, உண்மையான சர்வகட்சி அரசாங்கத்திற்காக சட்டத்தரணிகள் சங்கம்,மகா சங்கத்தினர் உட்பட மதகுருமார்கள் முன்வைத்த முன்மொழிவுகளை முன்னோக்கி நகர நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

இதை விடுத்து நகர்த்துவதற்கு பைத்தியம் பிடித்த இடைத்தரகர்களைக் கொண்ட அரசாங்கங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.