Header Ads



இலங்கை மருத்துவர் மிச்சேல் ஆனந்தராஜா, அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றி


அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் சார்பில் விக்டோரியா மாநிலம் மெல்பேர்னின் Higgins தொகுதியில் போட்டியிட்ட இலங்கை வம்சாவளியை சேர்ந்த மருத்துவரான மிச்சேல் ஆனந்தராஜா வெற்றி பெற்றுள்ளார். அவர் 56.1 வீத வாக்குகளை பெற்றுள்ளார். அதாவது 30 ஆயிரத்து 46 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

மிச்சேல் ஆனந்தராஜா தனது சிறுவயதில் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.

அவுஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற சமஷ்டி பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றதுடன் அன்டனி ஹெல்பனிஸ் நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்.

தொழிற்கட்சி ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் ஆட்சிக்கு வந்துள்ளது.


No comments

Powered by Blogger.