Header Ads



நஸீரின் வீட்டுக்கு தீ வைத்த, 16 வயது சிறுவன் உட்பட 15 பேர் கைது - பலர் தலைமறைவு, விமான நிலையத்திலும் ஒருவர் பிடிபட்டார்


ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு மற்றும்  ஆடைத்தொழிற்சாலையைஉடைத்து சேதப்படுத்திய    சம்பவம் தொடர்பாக  மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை (21)   16 வயது சிறுவன் ஒருவர் உட்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு ள்ள நிலையில் இவர்களை எதிர்வரும் 25 ம்திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டா ர்; 

கடந்த (10) ம்திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம் வீடு அவரது உறவினாரின் வீடு ஹோட்டல் கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத் தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கினர்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குமுவினர் மேற்கொண்டு வந்த விசாரணையில் நேற்று சனிக்கிழமை ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த எதிர்வரும் திங்கட்கிழமை க.பொ.த சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயது சிறுவன் உட்பட  15 பேரை கைதுசெய்தனர்

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக  இதுரை 15 பேரை கைது செய்துள்ளதாகவும் இதனுடன்  தொடர்புபட்ட பலர் தலை மறைவாகியுள்ளதாகவும் இதில் ஒருவர் நேற்றைய தினம்  கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள ஏனையவர்களை  கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்

No comments

Powered by Blogger.