Header Adsகாதி நீதிமன்றம் புறக்கணிப்பு, முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிப்பு, புதிய நீதியமைச்சரிடம் எடுத்துரைப்பு


(ஏ.ஆர்.ஏ. பரீல்)

நாட்டில் காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பு புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­மை­யாலும் காதி மேன்­மு­றை­யீட்டு மன்­றத்­துக்கு மூன்று வரு­டங்­க­ளுக்கும் மேலாக செய­லாளர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டா­மை­யி­னாலும் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பல்­வேறு இன்­னல்­களை எதிர்­கொண்­டுள்­ளது. புதிய நீதி­ய­மைச்­ச­ராகப் பத­வி­யேற்­றுள்ள நீங்கள் இவற்­றுக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என காதி­நீ­தி­ப­திகள் போரத்தின் துணைத்­த­லைவர் இப்ஹாம் யெஹ்யா நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

காதி­நீ­தி­ப­திகள் போரத்தின் துணைத்­த­லைவர் இப்ஹாம் யெஹ்யா இது தொடர்பில் நீதி­ய­மைச்­ச­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். குறிப்­பிட்ட கடி­தத்­திலே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடிதத்தில் மேலும் தெவிக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘நீங்கள் நீதி­ய­மைச்­ச­ராக பத­வி­யேற்­றமை குறித்து நாம் மகிழ்­கிறோம். முன்பு நீங்கள் நீதி­ய­மைச்­ச­ராகப் பதவி வகித்த காலத்தில் காதி­நீ­தி­ப­தி­களின் பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்­தி­னீர்கள். அவர்­க­ளது கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரித்­தீர்கள். காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பில் நீண்ட கால­மாக பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றன. இவற்றை விரைவில் தீர்த்து வைப்­பீர்கள் என்ற நம்­பிக்கை எமக்­குண்டு.

நாட்டில் 65 காதி­நீ­தி­மன்­றங்கள் உள்­ளன. 65 காதி­நீ­தி­ப­தி­களில் 20 பேர் பதவி இரா­ஜி­னாமா, அல்­லது பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை அல்­லது பதவி காலா­வ­தி­யாகி விட்­டமை கார­ண­மாக வெற்­றிடம் நில­வு­கின்­றன. தற்­போது நீண்ட காலமாக இந்த காதி நீதி­மன்ற பிரி­வு­களின் செயற்­பா­டுகள் அரு­கி­லி­ருக்கும் காதி­நீ­தி­மன்­றங்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதனால் காதி­நீ­தி­ப­தி­யொ­ருவர் இரண்டு அல்­லது மூன்று நீதிப்­பி­ரி­வு­களில் கடமை செய்ய வேண்­டி­யுள்­ளது. இது வேலைப்­பளு மிக்­க­தாகும். இந்த 20 வெற்­றி­டங்­க­ளுக்கு நிரந்­த­ர­மாக காதி­நீ­தி­ப­தி­களை நிய­மிக்கும் நட­வ­டிக்கை நீதிச்சேவைஆணைக்­கு­ழு­வினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

மேலும் 45 காதி­நீ­தி­ப­தி­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் ஜூன் 30ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யா­கி­றது. இவற்றில் 25 காதி­ நீதிப் பிரி­வு­க­ளுக்கு விண்­ணப்­பங்கள் ஏற்­க­னவே கோரப்­பட்­டி­ருந்­தாலும் நேர்­முகப் பரீட்சை நடத்­தப்­ப­ட­வில்லை. இதனால் பொது­மக்கள் நீதியைப் பெற்­றுக்­கொள்­வதில் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. தாம­தங்­க­ளுக்கு காதி­நீ­தி­ப­தி­களே காரணம் என பொது­மக்­கள் குற்றம் சுமத்­துகின்றனர்.

காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் எந்தப் பயிற்­சியும் வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்­பதை இங்கு சுட்­டிக்­காட்­டு­கிறோம். பல நீதிப் பிரி­வு­களில் காதி நீதி­பதி வெற்­றிடம் நில­வு­வதால் பொது­மக்கள் தங்கள் தேவை­க­ளுக்கு ஏனைய பகு­தி­யி­லுள்ள காதி­நீதி மன்­றங்­க­ளுக்கு செல்ல வேண்­டி­யுள்­ளது. அவர்கள் நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

காதிகள் மேன்­மு­றை­யீட்டு மன்­றுக்கு கடந்த 3 வருட கால­மாக செய­லாளர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அப்­ப­தவி வெற்­றி­ட­மாக உள்­ளது. இதனால் மேன்­மு­றை­யீட்டு வழக்­குகள் அதிகம் தாம­த­மா­கின்­றன. இப்­ப­த­விக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் அனு­ப­வ­முள்ள தகு­தி­யான முஸ்லிம் ஒருவர் தாம­த­மின்றி நிய­மிக்­கப்­பட வேண்டும்.

அத்­தோடு முஸ்லிம் விவாக பதி­வா­ளர்­க­ளுக்கும், காதி நீதி­ப­தி­க­ளுக்கும் பயன்­படும் வகையில் ஆலோ­சனைச் சபை­யொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும். இது பய­னுள்­ள­தாக அமையும். இக்­கு­ழுவில் பதி­வாளர் நாயகம், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர், நீதிச்சேவை ஆணைக்குழுவின் காதிகள் பிரிவின் பிரதிநிதி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், வக்பு சபையின் தலைவர், காதி நீதிபதிகள் போரத்தின் பிரதிநிதிகள், திருமணப் பதிவாளர் ஒருவர் அங்கம் வகிக்கலாம்.

காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பை மீண்டும் செயற்­திறன் மிக்­க­தாக மாற்­றி­ய­மைப்­ப­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொள்­கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

1 comment:

  1. Mr. Ibm Yehya, the Deputy Leader of the Judicial Struggle,

    Were these serious problems in the Quazi Court system, taken up with the Former Minister of Justice, Hon. Ali Sabry? If so, what was his response? If not, why not?

    ReplyDelete

Powered by Blogger.