Header Ads



ஆளும்கட்சி கூட்டத்தில் சலசலப்பு, டளஸ் மீது தாக்குதல், கோபமடைந்த நாமல், தாக்குதலுக்கு ரெடியான குட்டியாராச்சி -- நட்பு பாராட்டிய மஹிந்த


 ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் மாலை (28) இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ முதலில் உரையாற்றினார்.

எனினும், அருந்திக பெர்னாண்டோவின் உரையை விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, இடைக்கால அரசாங்கங்களை அமைப்பதற்கு ஆணை வழங்கப்படவில்லை எனவும் ஆட்சியமைப்பதற்கே இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், டலஸ் அழகப்பெருமவுடன் இணைந்து பிரதமராக்க சதி செய்வதாகக் கூறி, அழஹப்பெரும மீது கடும் தாக்குதல் நடத்த குட்டியாராச்சி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதேவேளை, தான் குட்டையாக இருந்தாலும், மலை போல் பலம் உள்ளவன் என்றும், பிரதமராக வர சதி செய்ய மாட்டேன் என்றும் அழகப்பெரும ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

‘நான் சதிகாரன் அல்ல. நான் வெளிப்படையாக பேசும் மனிதன். அப்போதும் அரசு புதியதாக இருக்க வேண்டும் என்றேன். இன்றும் நான் சொல்கிறேன் அரசாங்கம் புதியதாக இருக்க வேண்டும். அவ்வாறு கூறுவதற்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை” என டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்

அதனையடுத்து, அருந்திக பெர்னாண்டோ மீண்டும் பேசியதுடன், இப்பிரச்சினை குடும்பப்பிரச்சினை எனவும், இதனை குடும்பத்திற்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அருந்திகவின் கூற்றால் கோபமடைந்த நாமல் ராஜபக்ச, குடும்பப் பேச்சு இங்கு தேவையற்றது என்றும் அருந்திக ஒருவருடன் இங்கு வந்து இன்னொன்றைச் சொல்வார் என்றும் கூறியுள்ளார்.

அதன்பின், பிரதமர் விவாதத்தை தொடங்கி வைத்தார். டலஸ் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், “டலஸ் எனக்கு அப்போதிருந்து தெரிந்தவர். அவர் நமக்கு அப்படி செய்பவர் அல்ல.

நான்தான் டலஸை அரசியலுக்கு கொண்டு வந்தேன். எனவே டலஸ் தான் என் முதுகில் குத்துகிறார் என்று நான் நினைக்கவில்லையென பிரதமர் குறிப்பிட்டுள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.