Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 1)


01.     ரமழான் மாத நோன்பின் நோக்கம் என்ன? அல் குர்ஆனில் அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைக் குறிப்பிடுக?

02.     அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என அல்குர்ஆன் கூறுகிறது? அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைக் குறிப்பிடுக?

03.     எந்த ஐந்து கேள்விகளுக்கு விடைதராமல் மனிதன் மறுமையில் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்று நபி (ஸல்) கூறினார்கள்?

04.     எந்த ஸஹாபியின்  மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது அவரது பெயரைக் குறிப்பிடுக?

05.     ரமழான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட பிரதான இரண்டு யுத்தங்களைக் குறிப்பிடுக?


1 comment:


  1. 01..
    ரமழான் சிறப்பு

    ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

    (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

    நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

    ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர் .......02...தக்வா (இறையச்சம்) உடையவர்கள்
    (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 49:13)03....) 1) வாழ்நாளை எப்படி கழித்தான் 2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான் 3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான் 4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான் 5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)04...
    சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் ஜனாஸா மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''சஅத் பின் முஆத் அவர்களின் இறப்புக்காக அர்ரஹ்மானின் அர்ஷ் - அரியணை அசைந்தது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்கள் - புகாரி 3803, முஸ்லிம் 4869, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)....
    05...ரமளான் மாதம் பிறை 17-ல் இஸ்லாமிய முதல்போர் பத்ரு யுத்தம்.

    பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம்.

    பத்ருப்போர் ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டு (கி.பி.624) ரமளான் மாதம் 17ஆவது நான் வெள்ளிக்கிழமை நடந்தது. அது (உண்மையையும் பொய்மையையும்) பிரித்துக் காட்டிய நாள் ஆகும். அன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தினான். அந்த நாளில் இணைவைப்பை அழித்தான்.இணைவைப்புப் படையினரையும் அதன் இருப்பிடத்தையும் நிர்மூலமாக்கினான்.

    ReplyDelete

Powered by Blogger.