Header Ads



அரசாங்கத்தை விமர்சித்தமையே சுசிலின் பதவியை பறிக்கக் காரணம், முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும் என்கிறார் ஜோன்ஸ்டன்


அரசாங்கத்தின் திட்டங்கள், கொள்கைகளை சுசில் பல தடவைகள் விமர்சித்துள்ளார். இதனாலேயே ஜனாதிபதி சுசிலின் பதவியை பறித்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும்  தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு  உள்ளது.   கொள்கைகளில் தவறு இருந்தால், அதைப் பற்றி பேச உரிய இடங்கள் உள்ளன. அது பற்றி அமைச்சரவையில் பேசலாம். மேலும்,  இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்.  அந்த சமயங்களில்  அதைப் பற்றி பேசலாம் எனவும் தெரிவித்தார். 

மூத்த அமைச்சர்கள் என்ற முறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்  ஜனாதிபதி அவர்கள் சரியான முடிவை எடுத்துள்ளார். இது முன்னரே எடுத்திருக்க வேண்டிய முடிவு. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை புரிந்து கொள்ளாமல் அமைச்சுப் பதவியை வகிப்பது  ஏற்புடையதல் எனவும் கூறினார்.

மேலும், வௌியில் செய்யும் அரசியலை அமைச்சரவையில்  செய்ய  முடியாது. அமைச்சரவைக்குள் எதனையும் பேசி தீர்த்துக்கொள்ள ஜனாதிபதி முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். எமது அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.