Header Ads



சிறைச்­சா­லைக்குள் அல் குர்­ஆனை பயன்­ப­டுத்­த அனு­மதிக்க வேண்டும் - நீதி­மன்றம் உத்தரவு


(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சில பிர­தி­வா­தி­க­ளுக்கு, சிறைச்­சா­லைக்குள் புனித அல் குர்­ஆனை பயன்­ப­டுத்­து­வ­தற்கு சிறைச்­சாலை அதி­கா­ரிகள் அனு­மதி மறுப்­ப­தாக நீதி­மன்றில் முறை­யி­டப்­பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதி­ராக சட்­டமா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­துள்ள வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போதே இந்த விடயம் விசேட ட்ரயல் அட்பார் நீதி­மன்றின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. பிர­தி­வா­திகள் இரு­வரின் சட்­டத்­த­ர­ணிகள் இதனை நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

அத்­துடன் ஏற்­க­னவே பிர­தி­வா­தி­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்ள குற்றப் பத்­தி­ரி­கை­களின் தமிழ் மற்றும் ஆங்­கில மொழி பெயர்ப்­புகள் தயா­ராக இன்னும் சிறிது கால அவ­காசம் தேவைப்­ப­டு­வ­தாக சட்­டமா அதிபர் சார்பில் விசேட ட்ரயல் அட்பார் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர இதனை நீதி­மன்­றுக்கு தெரி­வித்தார்.

இந் நிலையில் 25 பேருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்கு எதிர்­வரும் மார்ச் 3 ஆம் ஆம் திகதி வரை ஒத்தி வைக்­கப்­பட்­டது.

16 பிர­தி­வா­தி­க­ளுக்கு மட்டும் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜர் :

 மன்றில் இவ்­வ­ழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது, தலைமை நீதி­பதி தமித் தொட்­ட­வத்த, பிர­தி­வா­தி­க­ளுக்­கான அர­சாங்க செலவில் சட்­டத்­த­ர­ணி­களை நிய­மிப்­பது தொடர்பில் அவ­தானம் செலுத்­தினார்.

இதன்­போது 25 பேரில் 9 பேருக்கு சட்­டத்­த­ர­ணி­களின் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.

மன்றில் 7,8,11,12,17,18,19,20,21 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட் ஆஜ­ரானார். 9 ஆம் பிர­தி­வா­திக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைனும், 13 ஆவது பிர­தி­வா­திக்­காக சட்­டத்­த­ரணி ஜி.கே. கரு­னா­சே­க­ரவும், 22,23,24 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி விஜித்­தா­நந்த மட­வ­ல­க­மவும், 25 ஆவது பிர­தி­வா­திக்­காக சட்­டத்­த­ரணி சுரங்க பெரே­ராவும் ஆஜ­ரா­கினர். 3 ஆம் பிர­தி­வாதி மில்­ஹா­னுக்­கா­கவும் நேற்று சட்­டத்­த­ரணி ஒருவர் பிர­சன்­ன­மானார்.

மன்றில் ஆஜ­ரான சட்ட மா அதிபர் தரப்பு:

 இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்­பாக மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­த­ரவின் தலை­மையில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­வன டி சில்வா உள்­ளிட்ட 7 பேர் கொண்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்­பிலும் சட்­டத்­த­ர­ணிகள் இரு­வரைக் கொண்ட குழாம் பிர­சன்­ன­மா­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

சட்­டத்­த­ர­ணிகள் இல்லை:

இந் நிலையில் பிர­தான பிர­தி­வா­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட நௌபர் மௌலவி உள்­ளிட்ட 9 பேர் சார்பில் சட்­டத்­த­ர­ணிகள் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை. சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­காத பிர­தி­வா­திகள் அனை­வ­ருக்கும் அரசின் செலவில் சட்­டத்­த­ர­ணி­களை நிய­மிப்­பது தொடர்பில் விருப்­பமா எனவும் இல்­லையேல் கட்­டணம் செலுத்தி சட்­டத்­த­ர­ணி­களை நிய­மிக்க சந்­தர்ப்பம் வேண்­டுமா எனவும் தலைமை நீதி­பதி தமித் தொட்­ட­வத்த நீதி­மன்ற உரை பெயர்ப்­பா­ளரின் ஊடாக பிர­தி­வா­தி­க­ளிடம் கடந்த தவ­ணையின் போது (2021 ஒக்­டோபர் 4) வின­வி­யி­ருந்தார்.

இதன்­போது பிர­தி­வா­திகள் ஒவ்­வொ­ரு­வ­ராக, தமக்கு தமிழ் தெரிந்த சட்­டத்­த­ரணி ஒரு­வரை அர­சாங்க செலவில் நிய­மிக்­கு­மாறு கோரி­யி­ருந்­தனர்.

சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் பட்­டியல் கைய­ளிப்பு:

இத­னை­ய­டுத்து, பிர­தி­வ­திகள் சார்பில் ஆஜ­ரா­வ­தற்­காக தமிழ் தெரிந்த சட்­டத்­த­ர­ணி­களின் பட்­டி­ய­லொன்­றினை மன்­றுக்கு சமர்ப்­பிக்­கு­மாறு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரி­ஸுக்கு, நீதி­மன்றம் கடந்த ஒக்­டோபர் 4 ஆம் திகதி அறி­வித்­தி­ருந்­தது.

இந் நிலையில் நேற்று அச்­சங்கம் குறித்த பட்­டி­யலை வழக்கை நெறிப்­ப­டுத்தும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­த­ர­வுக்கு கைய­ளித்­தி­ருந்­தது.,

அதன்­படி முதல் பிர­தி­வாதி நௌபர் மௌலவி மற்றும் 10 ஆவது பிர­தி­வா­திக்கு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஸ்தி ஹபீப் அரச செலவில் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 2,14 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி ரிஸ்வான் ஹுசைனும், 4,15 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்கு சட்­டத்­த­ரணி அசார் முஸ்­த­பாவும், 5,16 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்கு சட்­டத்­த­ரணி இம்­தியாஸ் வஹாபும், 6 ஆம் பிர­தி­வா­திக்கு சட்­டத்­த­ரணி சச்­சினி விக்­ர­ம­சிங்­கவும் அரச செலவில் சட்­டத்­த­ர­ணி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டனர்.

குற்றப் பத்­தி­ரிகை மொழி பெயர்ப்பு :

இந் நிலையில், முழு­மை­யாக சிங்­கள மொழியில் இருந்த குற்றப் பத்­தி­ரிகை தொடர்­பிலும் தலைமை நீதி­பதி கடந்த ஒக்­டோபர் 4 ஆம் திகதி பிர­தி­வா­தி­க­ளிடம் வின­வி­யி­ருந்தார்.

அதன்­போது, 7 பிர­தி­வா­தி­களைத் தவிர ஏனைய 17 பிர­தி­வா­தி­களில் 16 பேர் தமக்கு குற்றப் பத்­தி­ரிகை தமிழில் வேண்டும் எனவும் 25 ஆவது பிர­தி­வா­தி­யான மொஹம்மட் அக்ரம் அஹக்கம் தமக்கு ஆங்­கில மொழியில் குற்றப் பத்­தி­ரிகை வேண்டும் எனவும் கோரி­யி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து பிர­தி­வா­திகள் கோரும் குற்றப் பத்­தி­ரி­கையின் தமிழ் மற்றும் ஆங்­கில வடி­வங்­களை அவர்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, சட்ட மா அதிபர் தரப்­புக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. எனினும் நேற்றும் அந்த மொழி பெயர்ப்­புகள் வழங்­கப்­ப­ட­வில்லை.

மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா கோரிய கால அவ­காசம் :

இது தொடர்பில் மன்­றுக்கு தெளி­வு­ப­டுத்­திய, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர, மொழி பெயர்ப்பு அச்சுப் பணி­க­ளுக்கு மேலும் கால அவ­காசம் வேண்டும் என அறி­வித்தார். அடுத்த தவ­ணையில் அவற்றை வழங்க முயற்­சிப்­ப­தா­கவும் அதற்குப் முன்­ப­தாக கிடைக்கப் பெற்றால் இடை­யீட்டு மனு ஊடாக அதனை மன்றில் ஒப்­ப­டைக்க நட­வ­டிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரி­வித்தார்.

9, 23 ஆம் பிர­தி­வா­தி­களின் முறைப்­பாடு :

இதன்­போது 9 ஆவது பிர­தி­வா­திக்­காக மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைன், தனது சேவை பெறு­ந­ருக்கு சிறையில் குர்ஆன் பிர­தியை வைத்­தி­ருக்க சிறைச்­சா­லைகள் அதி­கா­ரிகள் தடை விதித்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார்.

சிறைச்­சா­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் பிர­காரம் புனித குர்ஆன் பிர­தியை வைத்­தி­ருக்க தடை இல்லை எனவும், அவ்­வா­றி­ருக்­கையில் அதற்கு மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதால் அது தொடர்பில் நீதி­மன்றம் உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்க வேண்டும் எனவும், அர­சி­ய­ல­மைப்பு ஊடாக உறுதி செய்­யப்­பட்ட உரி­மையை மீற முடி­யாது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

23 ஆவது பிர­தி­வா­திக்­காக ஆஜ­ரான சட்­டத்­த­ரணி மட­வ­லவும், தனது சேவை பெறு­ந­ருக்கும் பூசா சிறையில் குர்ஆன் பிர­தியை வைத்­தி­ருக்க தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அது குறித்தும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும் கோரினார்.

இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் பொதுவான உத்தரவைப் பிறப்பித்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்துக்கு அமைய, புனித அல் குர் ஆன் பிரதியை வைத்திருப்பது தொடர்பில் அனுமதியளிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டது.

2 comments:

  1. அதிக கௌரவ நீதிமன்றங்கள் சட்டத்தை மதித்துச் செயல்படுவது எமக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.அத்துடன் எமது நியாயமான உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற தைரியத்தையும் வழங்குகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.