Header Ads



போட்டியிடத் தயங்கப் போவதில்லை - அர்ஜுன


நல்ல ஊழல் அற்ற குழுவை அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட அழைத்தால், தான் தேர்தலில் போட்டியிடத் தயங்கப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையில்  வணக்கம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"இந்தப் பௌத்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் அமைப்பை உருவாக்கும் அதே வேளையில், திருட்டு, ஊழல் மற்றும் பலவற்றை எதிர்த்துப் போராடு வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இளைஞர்களை முன்னோக்கிக் கொண்டு வர வேண்டும். அரசியலில் தேசங்கள், கட்சிகள், மதங்கள் என்று பிரிவினைகள் இருக்கக் கூடாது. மேல் மனிதன் முதலில் திருடுவதை நிறுத்த வேண்டும். அதன்பின் கீழ் திருட்டு நடக்காது. அப்படி ஒரு குழு சேர்ந்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

எரிவாயு சிலிண்டர்களின் இரசாயனக் கலவையை மாற்றுவதற்கு முன், சேதத்தை முதலில் தீர்மானிக்க வேண்டும். இன்று இந்த நாடு பணத்தின் செல்வாக்கின் கீழ் உள்ள நாடாக மாறிவிட்டது. நாட்டிலும் விளையாட் டிலும் இவ்வாறு நடப்பது துரதிஷ்ட வசமானது” என ரணதுங்க தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் 8 லட்சம் முதல் 9 லட்சம்  வரையான இளம் வாக்காளர்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப் படுவதாகவும், பொய் சொல்லி வாக்குகளைப் பெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


1 comment:

  1. ஆம் நிச்சியம் இந்த முட்டைத்தலைக்கு எஞ்சிய அறுபத்தி ஒன்பது இலட்சம் மக்களும் வாக்குகளை வழங்கி உடனடியாக சனாதிபதியாக நியமிக்க வேண்டும். அந்த ஒ்ரு பிரச்சினை மாத்திரம்தான் இந்த நாட்டு மக்களுக்கு எஞ்சியிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.