Header Ads



இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை...!


வெள்ளிக்கிழமை  (03-12-2021) அதிகாலை அருகாமையில் வசித்த நண்பர்கள் மற்றும் வழியனுப்ப வந்த உறவினர்களிடமும் சொல்லி விட்டு புறப்பட்ட பயணம் இறுதியானது என்று அந்த குடும்பத்தினருக்கு தெரியாது...

கடந்த 17 வருடங்களாக சவூதி அரேபியாவின் பிரபலமான அப்துல் லத்தீப் அல் ஆமீன் கம்பெனியில் ஃபீல்ட் ஆபீசராக ஜுபைல் கிளையில் பணிபுரிந்த ஜாஃபிர் அனைவருக்கும் பிரியமானவர்.. மனித நேய சேவைகள், காருண்ய பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்டவர். மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ஜுபைலிலேயே வசித்து வந்தார்..

மூன்று மாதங்கள் முன்பு சொந்த ஊரான கோழிக்கோடு பேப்பூருக்கு  விடுமுறையில் சென்ற ஜாஃபிர் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து உறவினர்கள் இல்லங்களுக்கும் மனைவி பிள்ளைகளுடன் சென்று நலம்

விசாரித்து மீண்டும் சவூதி அரேபியா வந்தவர்..

விடுமுறை முடிந்து துபாயில் 15 நாட்கள் குவாரண்டைன் இருந்து சவூதி அரேபியா வந்தவருக்கு ஜுபைலில் இருந்து ஜிஸான் கிளைக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.

கடந்த வாரம் ஜாஃபிர் மட்டும் ஜிஸான் சென்று பணியில் சேர்ந்து, குடும்பம் வசிக்க வசதியாக வில்லா பார்த்துவிட்டு வந்து நேற்றைய தினம் அதிகாலை ஒரு சரக்கு வாகனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றி அனுப்பி விட்டு, பல வருடங்களாக பழகிய அண்டை வீட்டார் உறவினர்களிடம் கண்ணீர் மல்க விடைபெற்று தனது காரில் திரும்பி செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மனைவி சப்னா (36), பிள்ளைகள் லைஃபா (7), ஸஹ(5), லுத்ஃபி(3) உட்பட ஐந்து பேரும் வஃபாத் ஆன துயரம்...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்... அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.

Colachel Azheem

4 comments:

  1. யாஅல்லாஹ் இந்த உனது அடியார்களின் பாவங்களை மன்னித்து ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக.அவர்கள் தெரிந்தும் தெரியாமலும் விட்ட தவறுகளை மன்னிப்பாயாக. ஆமீன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. Inna lillahi ba inna ilaihi rajioon ! May Almighty grant all of them the highest ranks in Jannah !

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

Powered by Blogger.