Header Ads



எனது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்க, மறுத்ததால் பதவி விலகுவதில் முட்டுக்கட்டை - அலி சப்ரி


ஒருநாடு ஒரு சட்டம் செயலணிக்கு தலைவராக ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு தான் பதவியை இராஜினாமா முன்வந்துள்ளதை நீதியமைச்சர் அலி சப்ரி உறுதி செய்துள்ளார்.

ஐலண்டிற்கு நீதியமைச்சர் இதனை உறுதி செய்துள்ளார்.

தனது இராஜினாமாவை  ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டார் எனவும் நீதியமைச்சர்தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி குறிப்பிட்ட செயலணி உருவாக்கப்பட்டமைக்கான நோக்கங்களை தெரிவித்தார் சட்டங்களை இயற்றுவதற்காக அந்த செயலணியை உருவாக்கவில்லை என அவர் குறிப்பிட்டார் என நீதியமைச்சர்தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் இன்னமும் முட்டுக்கட்டை நிலையிலேயே உள்ளது என தெரிவித்துள்ள அலிசப்ரிஅவ்வாறானதொரு செயலணியை உருவாக்குவதற்கு அரசமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட செயலணி குறித்த தானும் கரிசனை கொண்டுள்ளதாகதெரிவித்துள்ள  நீதியமைச்சர் அதன் தலைவர் அதன் செயற்பாடுகள் குறித்தும் கரிசனையடைந்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். TL


No comments

Powered by Blogger.