Header Ads



ஒரு வருடத்தின் பின், மகனை சந்தித்த தாய் - முழு மனித குலமும் அவமானப்பட வேண்டும் என்கிறார் சட்டத்தரணி சஞ்சய ஜயசேகர


பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு கடந்த 2020 மே மாதம் முதல் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான மன்­னாரைச் சேர்ந்த அஹ்னப் ஜெஸீமை, சுமார் ஒரு வரு­டத்தின் பின்னர் அவ­ரது தாயார் சிறையில் சந்­தித்­துள்­ள­தாக அவ­ரது சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர தெரி­வித்தார்.

“ஒரு வருடம் கழித்து, மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஒரு தாய் தன் மகனை சிறையில் பார்த்து அவருடன் சில வார்த்தைகளை பரிமாறிக்கொள்வது என்பது எவ்வளவு கவலைக்குரியது? இது பற்றி முழு மனித குலமும் அவமானப்பட வேண்டும்” என சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர இச் சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

கொவிட் நிலை­மை­களை கார­ண­மாகக் கொண்டு அவரை நேரில் சந்­திப்­ப­தற்கு இது­வரை சிறை அதி­கா­ரிகள் அனு­மதி மறுத்து வந்­தனர். இந் நிலை­யி­லேயே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு மகசின் சிறைச்­சா­லைக்குச் சென்று தனது மகனை சந்­திப்­ப­தற்கு அவ­ரது தாயா­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. சுமார் 15 நிமி­டங்கள் வரை இச் சந்­திப்பு நீடித்­த­தாக அறிய முடி­கி­றது.

அஹ்னப் ஜெஸீம் எது­வித குற்­றச்­சாட்­டுக்­க­ளு­மின்றி அநி­யா­ய­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை உட­ன­டி­யாக விடு­தலை செய்­யு­மாறும் சர்­வ­தேச மன்­னிப்புச் சபை, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

1 comment:

  1. Innocents are in jail terrorists are in parliment.

    ReplyDelete

Powered by Blogger.