Header Ads



பாலியல் ஆற்றல் குறைவடையுமென வதந்தி பரவியுள்ளதால், இனைஞர்கள் தடுப்பூசி செலுத்த பின்னடிப்பு - ராஜாங்க அமைச்சர்


20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கான ஆர்வம் குறைவடைந்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால்,  பாலியல் ஆற்றல் குறைவடையும் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை அடுத்தே, இளைஞர்களிடையே தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கான ஆர்வம் குறைந்துள்ளதாகவும், அவர் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சில பகுதிகளில் இளைஞர்களிடையே தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கான ஆர்வம் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்றார்.

தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதால், பாலியல் ஆற்றல் குரைறவடைவதுடன், மலட்டுத்தன்மையை அதிகரிக்கிறது என பொய்யான கட்டுக்கதைகள் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படுகிறது.

இவ்வாறான கதை பரவியவுடன், இது தொடர்பான உலகலாவிய ஆராய்சிசிகளின் முடிவுகளை பார்த்தோம். அதில் அத்தகைய கருத்தோ அறிக்கையோ எங்கும் வெளியிடப்படவில்லை. எனவே, இதுவொரு கட்டுக்கதை ஆகும் எனவும், அவர் கூறினார்.

மேலும், மாணவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற நிலைப்பாடு வந்துள்ளது. இதில் ஆரம்ப வகுப்பு, முன்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை. ஏனென்றால், சிறுவயது பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது குறைவு எனவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.