Header Ads



தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தொடர்பில் மக்களை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டங்களை பிரதேச அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும்

ஊடரங்கு நிலைமையை நீடித்து, அந்த கால பகுதிக்குள் தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்தி முடிக்க திட்டம்:


நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு நிலைமையை, செப்டெம்பர் 06ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்று முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இதன்போது, தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதோடு -

இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பிரதேசங்கள் காணப்படுமாயின்,  அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு நான் அறிவுறுத்தினேன்.

பிறிதொரு காரணத்தால் தடுப்பூசியின் முதலாம் செலுத்துகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நபர்கள் காணப்படுவார்களாயின், இரண்டாவது செலுத்துகைத் தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்களில் வைத்தே அவ்வாறானவர்களுக்கும் முதலாவது செலுத்துகைத் தடுப்பூசியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது. 

தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தொடர்பில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டங்களை  பிரதேச ரீதியில் அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இதன்போது எடுத்துரைத்தார். 

No comments

Powered by Blogger.