Header Ads



எப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்தோமோ, அந்த நிலை இப்போது உருவாக தொடங்கி இருக்கிறது

"வைத்தியராக கடமை ஏற்ற எனது முப்பது வருட சர்வீசஸில் எத்தனையோ முறை ஐஸியு பேட் தேடி நிறைய வைத்தியசாலைகளுக்கு கோல் எடுத்திருக்கிறேன்.  ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக தான் எனது வாழ்வில் முதன் முதலாக வைத்தியசாலைகளில் எங்காவது கட்டில் ஒன்று பிரீயாக இருக்கிறதா என்று கோல் எடுக்க வேண்டி வந்திருக்கிறது. இது மிகவும் துரதிஷ்டமானது" என்பதாக கவலையோடு பதிவொன்றை நேற்று இட்டிருந்தார் மூத்த வைத்தியர் ஒருவர்.

எப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எச்சரிக்கை செய்தோமோ அந்த நிலை இப்போது உருவாக தொடங்கி இருக்கிறது. இது வெறும் டீசர் தான். ஒரு சுனாமிப்பேரலையின் சிறு அலை போல, ஒரு பெரும் தீப்பிழம்பின்  கங்கு போல. மெயின் பிக்சர் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளிவந்து விடும். 'முழுசாத்தான் நலைஞ்சாச்சு இனி முக்காடு எதற்கு என்பது தான் நம் நாட்டின் தற்போதைய நிலை. 

ஆகவே, இந்த நாட்களில் யாருக்காவது காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, தொண்டை நோவு, உடல் அசதி, கடுமையான தலையிடி, இயலாமை, மணம், சுவை உணர முடியாமை, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகளில் ஒன்றோ பலதோ இருந்தால் அது கொரோனா தான். கொரோனாவே தான்(Until proven otherwise). வேறு நோய்கள் என்று யாராவது சொன்னால் அது பொய். அவர்கள் வைத்தியர்களாக இருந்தாலும் சரியே. 

உத்தியோகபூர்வ கணக்குப்படி எழுந்தமானமாக சமூகத்தில் எடுக்கும் PCR டெஸ்களில் 20% கொரோனா பொஸிடிவ் என்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் தனிப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்கின்ற போது இது 40% தொடக்கம் 45% இருக்கின்றது.  அப்படியானால், குறைந்தது ஒரு 30%ஆவது இருக்க முடியும்.

இதன் அர்த்தம் உங்களைச்சுற்றி உள்ள 100 அயலவர்களில், குறைந்தது 30 அயலவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறது. இன்று உங்களோடு கடையில் தேநீர் அருந்திய 10 நண்பர்களில் மூவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. நேற்று மாலை உங்களோடு கதைத்துக் கொண்டிருந்த 5 உறவினர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. இது மினிமமான, ஒரு எளிய  கணக்கு மாத்திரமே. உண்மை இதை விட அதிகம்.  அப்படியானால் அது உங்களுக்கும் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் உறவினர்களுக்கும் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இருப்பதற்கான  சாத்தியம் உள்ளது. அது தான் உண்மை. நிஜம்.

அப்படியானால்...

20,000 மக்கள் வாழ்கின்ற ஒரு ஊரில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கும்? 

300 000 சன அடர்த்தி உள்ள ஒரு நகரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கும்?

21மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கும்?

கணக்கு வெளிப்படையானது. இதற்கு பிசிஆர் தேவை இல்லை. அன்டிஜனும் தேவை இல்லை. பிசிஆர் எண்ணிக்கையை குறைத்து டெஸ்ட் செய்வதில் பலன் இல்லை என்பது அரசாங்கத்திற்கு கூட புரியவில்லை. இது பூனை கண்ணை மூடி பால் குடிப்பதற்கு ஒப்பானது. 

தென்னம் தோப்பில் ஏதாவது கீழே விழும் சத்தம் கேட்டால் அது தேங்காயாக  இருக்கும் என்றெண்ணி விழுந்த தேங்காயை தேடுவது தான் புத்திசாலித்தனம். இல்லை அது ஸ்டோபரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தால் போக வேண்டி இடம் அங்கொட இல்லை, மஜ்மா நகர். 

ஆகவே, இயலுமானவரை தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது மட்டுமே முன்னால் உள்ள ஒரே வழி. அது போல, நோய் ஆரம்ப நிலையில் உரிய சிகிச்சை பெறுவது தான் புத்திசாலித்தனம்.

Dr PM Arshath Ahamed MBBS, MD PAED

1 comment:

  1. Do not listen to the doctor .. then it will apply to your advice ..
    The government is fully responsible for the current situation.
    Corona avoids popular uprising against them.

    ReplyDelete

Powered by Blogger.