Header Ads



இந்த அரசாங்கத்திற்கு மூளையும் இல்லை, இதயமும் இல்லை - சம்பிக்க


நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க இன்று(30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.

இந்த நாட்களில் கோவிட் நிதியத்திற்கு சம்பளம் கொடுப்பது பற்றி பேசப்படுகிறது. ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் பெரிய தொகை அல்ல. எனக்கு ரூ.54,000 சம்பளம் உள்ளது. எரிபொருள் உள்ளடங்களாக மாதாந்தம் மொத்தம் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா கிடைக்கிறது.ஏனைய சலுகைகள் உத்தியோகத்தர்களுடன் சம்பளத்துடன் இனைக்கப்பட்டுள்ளது.ஆனால் மக்களுக்கு ஒரு முன்னுதாரணம் இருக்க வேண்டும். இதற்கு பல அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சம்பளத்தில் அல்லாமல் வியாபாரத்தில் இருந்து சம்பாதிக்கிறார்கள். எனவே, இவர்களிடமிருந்து பெறப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் ஒரு முன்மாதிரியாக செயற்பட வேண்டும். அதன் படியே எங்கள் சம்பளத்திலும் ஒரு தொகையை இதற்கு வழங்குகுறோம்.இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.என்றாலும் முதல் படியாக,இதற்கும் மேலாக மேற்கொள்ள வேண்டிய விடயம் தான், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் நண்பர்களிடமிருந்து பணத்தை மீட்பதாகும்.

இன்று நாடு பெரும் நெருக்கடியில் உள்ளது.

2019 டிசம்பரில் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த விலையையும், இந்த ஆண்டு ஆகஸ்டில் 20 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது விலைகள் உச்சத்தை தொட்டுள்ளன.

உதாரணமாக 2019 இல் கீரி சம்பா 88 ரூபா இன்று 150 ரூபா,2019 இல் நாட்டரிசி  94 ரூபா இப்போது ரூ.110,120 ரூபா. சிவப்பரிசி 2019 இல் 85 ரூபா இன்று 100 ரூபா.

அரிசி தான் அவ்வாறு என்றால் சீனி மோசடியால் 2019 இல் 100 ரூபாவாக இருந்தது இன்று 220 ரூபா.40 ரூபாவிற்கு இருந்த தேங்காய் இன்று ரூ .90.2019 இல் 320 ரூபாவாக இருந்த தேங்காய் எண்ணெய் இன்று 710 ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 2019 இல் ரூபா.110 இல் இருந்த பருப்பு இன்று 240 ரூபாய்க்கும், 109 ரூபாவாக இருந்த உருளைக்கிழங்கு இன்று 295 ரூபாய்க்கும், சிவப்பு வெங்காயம் அக்டோபர் 2019 இல் 244 ரூபாய்க்கும், இன்று 432 ரூபாய்க்குமாக விற்க்கப்படுகின்றன.இது தான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் சௌபாக்கியத்தின் தொலைநோக்கு.

சால மீன் அக்டோபர் 2019 இல் 204 ரூபா,இன்று 360 ரூபா.குருள்ள மீன் 2019 இல் 342 ரூபாவாகவும் இன்று 590 ரூபாவாகவுமுள்ளது.பார மீன் 2019 இல் 604 இன்று 1180 ரூபாவாகவும் உள்ளன.

அடுத்து, காய்கறிகளின் விலை ரூ .92 வட்டக்காய் இன்று 180,கோவா 103 இன்று 200,போன்சி அன்று 102 இன்று 286,தக்காளி 105 இன்று 180,செமன் 220 இன்று 360 ஆக இருக்கிறது.இன்று அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன, மேலும் மக்கள் வாழ்க்கைச் செலவை தாங்க  முடியாத அளவுக்கு கிட்டத்தட்ட 100% உயர்த்துள்ளது. 

இவற்றுக்கு ஐந்து முக்கிய காரணங்கள் உண்டு.பணம் அச்சடிப்பது முதலாவது காரணமாகும்.குறுகிய காலத்தில் 1215 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்ட மத்திய வங்கி பில்கள் 2019 டிசம்பர் முதல் தற்போது வரை அச்சிடப்பட்ட பணத்தின் அளவீடு ஆகும். நல்லாட்சியில் 80 ஆக இருந்தது இன்று 1215 ஆக உயர்த்துள்ளது.அவ்வாறு அச்சடிப்பதாலயே அத்தியவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.இன்று அதிவேக வீதி,போக்கு நிர்மானம்,நடைபாதைகள் நிர்மாணம் என்று பட்டியல் நீண்டு செல்கிறது.இதனால் மக்களே இதன் சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

பொருட்களின் விலை உயர்வுக்கு இரண்டாவது காரணி தான் அரசாங்கத்தின் தவறான நிதிக் கொள்கையின் காரணமாக ஏற்ப்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை ஆகும். 

நல்லாட்சி காலத்தில் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி அவரின் நுட்பமான அறிவால் சேமித்த 7.2  பில்லியனிலிருந்தும் அரசாங்கத்தின் ஏனைய மிகுதி சேமிப்புகளிலிருந்துமே அரசாங்கம

செலவு செய்து வந்தது. இதன் விளைவாக, வெளிநாடுகளில் இருந்து உணவு இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டு, அதற்கான கடன் கடிதங்களை வழங்குவது கடினமாகிவிட்டது.

உலக சந்தையில் சீனியின் விலை டொலர் 44 சதம் ரூபாவில் 92,சகல இறக்குமதி செலவுகளும் போக 99 ரூபாவிற்கு விற்கலாம்.ஆனால் இன்று 240 ரூபாவற்கு விற்க்கப்படுகிறது.

ஒக்டோபர் 2020 முதல், ஒரு வருடமாக நாட்டில் ஒரு பெரிய சீனிக் கொள்ளை நடந்துள்ளது.இதனால்  ரூ.70 பில்லியனை இலாபமாக ஒரு வருடத்தில் பெற்றுள்ளனர். ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று அரசாங்கம் கூறியது.  எனவே, அர்ப்பணிப்பு செய்யுமாறு மக்களை அரசாங்கம் வேண்டிய போதிலும்,அத்தியவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மூலம் மக்களுக்கு தொடர்ந்து துன்பத்தை ஏற்படுத்துவதை நாங்கள் காண்கிறோம்.

மூன்றாவது காரணம் உரங்கள் மற்றும் இரசாயனப்பொருட்களை இறக்குமதி செய்ய விடுத்த தீர்மானாத்தால் ஏற்ப்பட்ட நெருக்கடி.  உண்மையில், முதல் 4 மாதங்களுக்குள் உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. மே 6 ஆம் திகதி உரம் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது ஏன்?  இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் தான் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மோசடியாக ஒரு பரிவர்த்தனை செய்ததை அறிந்து கொள்ள வேண்டும்.விமான சேவைகள் நிறுவனத்தின் நட்டத்தை முகாமை செய்ய ஐந்தாயிரம் டொலர்கள் பருவர்தனை செய்யப்பட்டது. இதனால் உரங்களை இறக்குமதி செய்வதற்கான டொலர்கள் கையிருப்பில் இல்லை.உரங்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்ட நேரத்தில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இன்று கருப்பு கடைகளில் விற்கப்படுகின்றன.

இதனால் உணவு பற்றாக்குறை ஏற்ப்படலாம். ஒக்டோபரில் பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது.விவசாயிகளுக்கு உரங்கள் இல்லை.சகல அறுவடைகளும் வீழ்ச்சியடைந்துள்ளது.உர உற்பத்திக்கு ஒரு ஏக்கருக்கு 12000 ரூபாவை அரசாங்கம் வழங்குகிறது இது போதுமானதாக இல்லை. 

நான்காவது காரணம் பொது நிதி முறைகேடாகும்.இதனால் 2020 வருடம் மாத்திரம் 523 பில்லியன் இலாபத்தை அரசாங்கம் இழந்தது.இறுதியில், பணம் அச்சிடப்படுவதுதான் வழியாக கையாள்கிறது. நாடு முழுவதிலும் மீண்டும் கொள்ளை தொடங்கியுள்ளது. ஒரு பொது ஊழியரின் ஒருங்கிணைந்த கொடுப்பனவை செலுத்த முடியாத அரசாங்கம் மக்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் கொடுக்க தடமாறுகிறது. இவற்றை மக்களுக்கு  கொடுக்க முடியாத அரசாங்கம் இன்று கொள்ளையர்களை திருப்திப்படுத்த கமிஷன் எடுக்க விலைமனுகோரல் செயல்முறை இல்லாமல் வேலை செய்கிறது.  தவறான நிதி கொள்கை இன்று வாழ்க்கைச் செலவு மற்றும் மக்களின் வருமான இழப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


ஐந்தாவது காரணம் மக்களின் வருமான இழப்பு. பொது ஊழியர்களைப் பொறுத்தவரை, நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்படும் சம்பள உயர்வு ஜனவரி 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்- அதிபர் சேவையின் முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும். தவறான பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதால் மக்கள் தங்கள் வருமானத்தை இழக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் சுமார் 50% முற்றிலும் இழக்கிறார்கள். 40% வர்கள் தொழிலை இழந்துள்ளனர்.இந்த இழப்புக்கு அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையே காரணம்.இது வரும் டிசம்பர் மாதத்திற்குள் இன்னும் மோசமான நெருக்கடியாக மாறும் என்று நாங்கள் கூறுகிறோம். கடன்களை அடைக்க டொலர் இருப்புக்களைப் பயன்படுத்துகின்றனர், அத்தியாவசிய கொள்முதலைக் கட்டுப்படுத்துவதால் உணவு,மருந்து, மற்றும் உரங்கள் மீதான தடை காரணமாக ஏற்படும் பஞ்சம். மக்கள் பட்டினி கிடக்கும் அளவுக்கு பசியால் வாடும் குழந்தைகளுக்கு பால் மா கூட முடியாத சிக்கலை எதிர்நோக்குகின்றனர். சௌபாக்கியத்தின் தொலைநோக்கு நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியதாகவும், உணவு பற்றாக்குறையை ஏற்ப்படுத்தியுள்ளதாகவும் என்றும் கூறப்படுகிறது.  முறையான பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அனுபவமுள்ள மற்றும் அதைப் பற்றி விஞ்ஞான ரீதியாக சிந்திக்கும், இந்த நாட்டை நேசிக்கும், ஊழல் இல்லாத, மக்களிடம் நாட்டின் பொருளாதாரத்தின் நிர்வாகத்தை ஒப்படைப்பதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

இன்று நாடு மூடப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் தெருக்களில் செல்லும்போது நாடு மூடப்படவில்லை என்பதை அறவீர்கள்.இந்த அரசாங்கம் அறிவியல்பூர்வமாக நாட்டை மூடவில்லை. இத்தகைய குறுகிய கால முடக்கத்தால் நோய் பரவல் குறையாது. இந்த முடக்கத்தை ஏலவே ந ஜூலை மாதம் எடுத்திருக்கலாம். ஆகஸ்டில் கூட எடுக்கவில்லை.இறுதியாக மக்கள் எதிர்ப்பால் எத்தகைய விஞ்ஞான பூர்வ ஏற்ப்பாடுகளுமின்றி தற்போது எடுத்துள்ளனர்.இதனால் பொருளாதாரமே பாதிக்கப்படும்.இவற்றுக்கு மத்தியில் இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வர முயற்சிக்கின்றனர்.இதனால் புதிய வகையான வைரஸ் நாட்டிற்கு வரலாம்.  அரசாங்கம் இத்தகைய பொறுப்பற்ற செயற்ப்பாடுகளை இன்னும் நிறுத்தவில்லை. இந்த செயல்முறையின் மூலம் நாட்டிற்கு நடந்தது பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைவதுதான்.சுற்றுலாப்பயணிகள் அழைத்து வரும்பட்சத்தில் புதிய உருமாறிய வகைகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க முடியாது.

நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை, ஆனால் விஷேட நிபுனர்கள், நாட்டை நேசிக்கும் பிரிவினர்கள், மோசடி செய்யாதவர்கள் மற்றும் சுகாதார அமைச்சகம் போன்றவர்களுக்கு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.  அரசாங்கத்திற்கு உன்மையான நிபுணர்களைக் காட்ட முடியாது, மோசடி செய்யாத நேர்மையானவர்களைக் காட்ட முடியாது. இந்த தாய்நாட்டை நேசிக்கும் மக்களை அரசாங்கத்துக்கு காட்ட முடியாது. எனவே, அவர்கள் நாசகாரர்களாகப் பார்க்கிறார்கள். எனவே தான் இந்த அரசியல் முட்டாள்களுக்கு வழிவகுக்கிறது.

இந்த அரசாங்கத்திற்கு மூளையும் இல்லை இதயமும் இல்லை.

No comments

Powered by Blogger.