Header Ads



புர்கா - ஹிஜாப் அணிந்த பலர் போதைப்பொருள் கடத்துகின்றனர், விபச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் - மத வெறுப்பை கக்கும் நடராஜா ரவிக்குமார்


(வீரகேசரி)

ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்து வந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாய் திறக்காமல் மெளனமாக இருப்பதற்கு காரணம் என்ன? உங்கள் கூட்டணியில் அங்கம் ரிஷாட் பதியுதீனை உடனடியாக இடை நீக்கம் செய்யாமல் இருப்பது ஏன் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார்  கேள்வி எழுப்பினார்.

ஹிஷாலியின் மரணத்தில் தொடர்புபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டணை வழங்க வேண்டும். அத்துடன், தமது மகளை வேலைக்கு அனுப்பிய ஹிஷாலியின் பெற்றோரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். இது ஏனைய பெற்றோருக்கும் சிறந்த பாடமாக அமையும் என கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

" இந்நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம்,நீதி காணப்பட வேண்டும். சிங்களவர், தமிழர், கிறிஸ்தவர், முஸ்லிம்கள் என சட்டங்கள் வேறுபட்டிருக்க முடியாது. இதில் முஸ்லிம்களுக்கென்று ஏன் தனியாக காதி நீதிமன்றம் என்றொன்று இருக்க வேண்டும். அனைவரும் இலங்கை நாட்டு பிர‍ஜைகள் என்ற அடிப்படையில் சகலருக்கும் ஒரே சட்டம் காணப்பட வேண்டும். முஸ்லிம் பெண்களில் புர்கா ,நிகாப் ஆகிய உடைகளை அணிந்த நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். எனினும், பலர் புர்கா மற்றும் ஹிஜாப் ஆகிய ஆடைகளை அணிந்து போதைப்பொருள்களை கடத்துகின்றனர். விபச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் " என்றார்.

சிறுமி ஹிஷாலினி ரிஷாட்டின் உறவினர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஈடுபட்டுள்ளார், அதேபோன்று ரிஷாத்தின் இல்லத்தில் முன்னர் பணிபுரிந்த 11 பெண்களில் சிலரும் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவரது மனைவி, மாமா, மைத்துனர் என இதனுடன் தொடர்புப்பட்ட அனைவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிஷாத்தின் இல்லத்துக்கு முன்பாக எமது கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. தற்போது மலையகம், வடக்கு, கிழக்கு என நாட்டின் பல பகுதிகளிலும் ஹிஷாலினிக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றமை பெருமையாக இருக்கிறது.

ஹிஷாலியின் மரணம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாய் திறக்காமல் மெளனமாக இருந்து வருகிறார். உங்கள் கூட்டணியில் அங்கம் ரிஷாத் பதியுதீனை உடனடியாக இடை நீக்கம் செய்யுங்கள். நீங்கள் ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்ற கனவுக்காக இருக்காமல், அவரை உடனடியாக உங்களது கூட்டணியிலிருந்து இடைநிறுத்துங்கள். 

சிறுமி ஹிஷாலியின் மரணத்தில் தொடர்புபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டயை வழங்க வேண்டும். அத்துடன், தமது மகளை வேலைக்கு அனுப்பிய ஹிஷாலியின் பெற்றோரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். இது ஏனைய பெற்றோருக்கும் சிறந்த பாடமாக அமையும்" என்றார்.  

ஹிஷாலினி விவகாரத்தில் குற்றம் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு இன,மத ,மொழி ஆகியவற்றைக் கடந்து  அனைவரும் ஒன்றுபடவேண்டும் என கட்சியின் உப தலைவர் ஆறுமுகம் சிவக்குமார் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயதான ரிசான நபீக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோது இன, மத, மொழி என்பற்றை கடந்து சகலரும் இலங்கையர் என்ற ரீதியில் நாடு பூராவும் போராட்டங்களை நடத்தினோம். எனினும், துரதிஷ்டவசமாக ரிசானா நபீக் அந்நாட்டு அரசாங்கத்தால் மரணத்தண்டனைக்குள்ளானார். அது மிகவும் வேதனையான சம்பவமாகும்.

இதுபோன்ற சிறுவர், சிறுமியர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் செயல்களுக்காக நாம் இன, மத, மொழியைத் தாண்டி குரல் எழுப்ப வேண்டும் என்றார்.

4 comments:

  1. Y recently their was a 15 year old girl from Mount Lavinia, what happened to her case...

    ReplyDelete
  2. எல்லா இனத்திலும் மதத்திலும் மனநிலை பிறழ்வு கொண்டவர்கள் உள்ளனர் அவர்கள் தத்தமது கலாசார அடையாளங்களுடன் தவறுகளைச் செய்வார்கள் மட்டுமன்றி தவறு செய்து இன்னொரு சமூகத்தின் மீது பழி போடுவற்கு முயற்சி செய்வோரும் உண்டு. எப்படியும் வாழலாம் என்ற கொள்கையுள்ளவர்கள் மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கைப்பற்றுள்ள இஸ்லாமியர்களின் அடையாங்கள் வயிற்றெரிச்சலைக் கொடுக்கும் என்பது தவிர்க்க முடியாது. உப்புச் சாப்பிட்டவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் அதுதான் இயற்கை. மனச் சுத்தமில்லாமல் சுய இலாபம் கருதி எந்த விடயத்திலும் ஈடுபடுவோரை இயற்கை தண்டித்தே தீரும். அது இவராகவும் இருக்கலாம் ரிசாத்தாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  3. இனவெறி முதலில் இந்துவிலிருந்தே இலங்கையில் பரவியது.

    ReplyDelete
  4. இப்படி மடையன்களின் செய்திகளை போடாவிட்டால் நல்லது அல்லவா.

    ReplyDelete

Powered by Blogger.