Header Ads



எங்களுக்கிடையில் எந்த நெருக்கடியும் இல்லை. சம்பிக்கவிற்கு கட்சியில் ஓர் பதவி வழங்குவது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கம்பஹா மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி பற்றி சில ஊடகங்கள் கதைகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எங்கள் கட்சிக்குள் ஒரு நெருக்கடி நிலவுவதாகவும், கட்சித் தலைவரை ஆதரிக்காத ஒரு தரப்பும் கட்சிக்குள் செயற்படுவதாக என்றும் வதந்திகள் வந்தன.சம்பிக்க ரணவக்க எங்கள் கட்சியில் பங்குதாரராக இருக்கிறார். அவர் கட்சியை விட்டு செயற்படுவதாக கதைகள் வெளிவந்தன.அவை அனைத்தும் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட கதைகளாகும்.கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் சமீபத்தில் பிரேரனை மூலம் சுட்டிக்காட்டினோம், சம்பிக்க ரணவக்கவும் பிரேரனையை ஆதரித்தார்.பிரேரனை மூலம் எல்லோரும் கட்சித் தலைவருடன் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. நாங்கள் கட்சியுடன் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம். பலர் கதைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எங்களுக்கிடையில் எந்த நெருக்கடியும் இல்லை. சம்பிக்க ரணவக்கவிற்கு கட்சியில் ஓர் பதவி நிலை வழங்குவது குறித்து இன்றும் நாங்கள் கலந்துரையாடினோம்.

நாங்கள் இன்று சந்தித்து பல விடயங்கள் குறித்தும் நாட்டின் நிலைமை பற்றியும் விவாதித்து ஒரு பெரிய நெருக்கடியைப் பற்றி விவாதித்தோம். உர நெருக்கடி குறித்து நாங்கள் நீண்ட விவாதம் நடத்தினோம். அரசாங்கத்தின் மாற்றீடு இல்லாமல் ஒரு தலைபட்சமாக செயற்பட்டமையால் அவதிப்படும் விவசாயிகள் குறித்து சிந்தித்ததோடு,அவர்களின் உருமைகளுக்காக நாங்கள் மக்களுடன் நிற்போம்.விவசாயிகள் உதவியற்றவர்களாக இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இரண்டாவதாக கொரோனா தொற்றுநோய் குறித்தும் அரசாங்கத்தைப் பற்றியும் விவாதித்தோம்.கொரோனாவால்  மக்கள் அதிர்ச்சியில் வாழ்கின்றனர். அரசாங்கத்தின் கட்டுப்படுத்தல் தோல்வி காரணமாக ஏராளமான நோயாளிகள் இன்று பரவலாக நாடு முழுவதும் காணப்படுகிறார்கள், மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாங்கள் அரசியல் ஆதாயத்தைப் பெறாத வன்னம் எதிர்க்கட்சியாக எமது பங்களிப்பை முறையாக மேற்கொள்கிறோம். 

அரசாங்கத்தின் எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்று விவாதித்தோம். அரசாங்கத்திற்குள்  ஒரு உள்ளக நெருக்கடியை நாங்கள் காண்கிறோம். சிலர் விலையை அதிகரிக்க விரும்புவதைக் காண்கிறோம். சிலர் அதைக் குறைக்கச் சொல்கிறார்கள். என்றாலும் உள்ளக முரன்பாடுகளை விட்டு விட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இன்று அரசாங்கம் உதவியற்ற மீனவர்களுக்கு ரூ.5000  கொடுக்கிறது, ஆனால் அது அரசியல்மயமாக்கப்பட்டு அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது பிழையான முன்மாதிரியாகும்.அரசியலுக்கு அப்பால் தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

பேர்ல் எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பற்றியதால் மீனவ சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அவர்களுக்கு நிவாரனம் வழங்க வேண்டும்.கிட்டத்தட்ட 40 கடல் ஆமைகள் இறந்துள்ளன. இது நமது தேசிய வளமாகும், இது பாதுகாக்கப்பட வேண்டியதும், அதை மீட்டெடுக்க வேண்டியதும் நமது கடமையாகும்.இயற்கை வளங்களை கரிசனையோடு கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.