Header Ads



ரிஷாட் - ரியாஜ் வழக்கு, மற்றுமொரு நீதியரசர் விலகல்


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகியுள்ளார்.

குறித்த மனு  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான எஸ்.துரைராஜா, யசந்த கோத்தாகொட ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக  இன்று (04)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது நீதியரசர் யசந்த கோத்தாகொட, தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரணைகளின் இருந்து விலகுவதாக மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 11ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, குறித்த மனு மீதான விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர்கள் குழாமிலிருந்த ஜனக் டி சில்வா, தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அறிவித்திருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்  தாம் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

3 comments:

  1. EVEN THE JUDGES WHO ARE NOT WILLING TO HEAR THE CASE FEEL GUILTY AS THEY KNOWS VERY WELL THIS IS A POLITICALLY FABRICATED CASE HAS NO LEGAL VALIDITY.

    ReplyDelete
  2. Cardinal also giving pressure to GOVT because he thinks they have to be Punished. Cardinal will be accountable for punishing innocent politicians without evidence. He should focus on terrorist only.

    ReplyDelete

Powered by Blogger.