Header Ads



நீர்கொழும்புக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மஞ்சளும், பீடி இலைகளும் பிடிபட்டன


- இஸ்மதுல் றஹுமான் -

சட்டவிரோதமாக வள்ளத்தில் மஞ்சள், பீடி இலைகளை கடத்திவந்து வள்ளத்திலிருந்து இறக்கும் போது, கடற்படையினர் சுற்றி வைலைத்ததில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூவர் தப்பி ஓடியுள்ளனர்.

சட்ட வீரோதமாக இரு வள்ளங்களில் கடத்திவந்து நீர்கொழும்பு, முன்னக்கரை கடலோரத்தில் இறக்கும் போது கடற்படையினர் சுற்றி வத்துள்ளனர். இதில் 14 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் மற்றும் பீடி இலைகள் பொதி செய்யப்பட்டு மறைத்துவைத்திருந்த நிலையில் கடற்படையினர் மீட்டுள்ளனர். ஒருவரை கைது செய்தனர். மூவர் அவ் இடத்திலிருந்து தலைமறைவாயுள்ளனர்.

டோலர் படகில் இவற்றைப் கொண்டுவந்து கடலில் வைத்து இரு சிறிய வள்ளங்களுக்கு மாற்றப்பட்டே கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கடற்படையினர் சுங்க அதிகாரகளிடம்

ஒப்படைந்தனர்.

சந்தே கநபருக்கு எதிராக சுங்க கட்டளைச் சட்டத்தின் 127ம் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டு நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஎல்ல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டதரணி எம்.பீ. எம். மாஹிர் ஏதாவது நிபந்தணையில் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தபோது தப்பி ஓடிய மூவர் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டதனால் சந்தேக நபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.



No comments

Powered by Blogger.