Header Ads



கொரோனா உடல்களை புதைப்பதற்கு எதிராக, இரணைத்தீவில் இன்றும் 2 போராட்டங்கள்


- எஸ்.றொசேரியன் லெம்பேட் -

இரணைத்தீவு பகுதியில், கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  இரணைத்தீவு பகுதியில் இருவேறு  இடங்களில் இன்று (04)  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இரணைத்தீவு பிரதான இறங்குதுரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள்  தோண்டப்பட்ட இடம் ஆகிய்பகுதிகளில், அப்பகுதி மக்களால்   போராட்டங்கள் முன்னெடுக்கப்லட்டன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினருக்கு இரணைத்தீவு மக்கள், நேற்று (03),   மகஜர் வழங்கி வைக்கப்பட்டன.

இருந்தபோதிலும், இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரணைத்தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படாத நிலையிலேயே, நேற்று இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

அத்துடன்,  இரணைத்தீவு பகுதிக்குச் செல்லும் மக்களிடன், கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்குச் செல்வதற்கு முன்னர், அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும், அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.  

1 comment:

  1. dear-people
    jannaza burned things is only drama,
    easter bomb blast in 2019, rajapksa thugs terrorist alrady paid for UK COMPANY million us dollar to chang mithree donkey and fox rani government

    IN SRILANKA ISIS WAS DRAMA, INDIAN RAW intellegent group was involved

    onside showing JANAZA among people lot of srilanka property are going to foreign company , stealing lot of money
    BUFFLO SHINKAL PEOPLE ARE ARUGUMENT

    ReplyDelete

Powered by Blogger.