Header Ads



குடியுரிமை வழங்கப்போகும் UAE - யாருக்கு பயன்..? யாருக்கெல்லாம் குடியுரிமை கிடைக்கும்..??


யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்றை இப்போது ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ளது.

ஆம், ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டவர்கள் என்றாலும் இதுவரை அந்த நாட்டு அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், புதிய அறிவிப்பின்படி யாருக்கெல்லாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியுரிமை கிடைக்கக்கூடும்? அதற்கான தகுதி என்ன? பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் குடியுரிமை கிடைக்குமா? இதுகுறித்து அங்கு வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? உள்ளிட்ட விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

யாருக்கெல்லாம் குடியுரிமை கிடைக்கும்?

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வலுசேர்க்கும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை அந்த நாடு முதல்முறையாக அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு குடியுரிமை திட்டத்தின்படி, முதலீட்டாளர்கள், தனித்துவமான திறமைகள் கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பணியாளர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் குடியுரிமை வழங்கப்படும் என்றும், மேலும் அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டிருக்க முடியுமென்றும் அவர் அறிவித்துள்ளார்.

"நமது (ஐக்கிய அரபு அமீரகத்தின்) வளர்ச்சி பயணத்துக்கு பங்களிக்கும்" நபர்களை கவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.

சிறந்த கல்வியறிவு மற்றும் பணித்திறனை கொண்டுள்ளவர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிரந்தரமாக தக்க வைக்கும் முயற்சியாக பார்க்கப்படும் இந்த திட்டத்தால், குறைந்த வருமானம் கொண்ட உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு பெரியளவில் பலன் இருக்காது என்றே கருதப்படுகிறது.

இதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்னவென்றால், குடியுரிமை பெற விரும்புபவர்கள் மற்ற நாடுகளை போன்று தாங்களாகவே குடியுரிமை கோரி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாது.

ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய திட்டத்தின்படி, குடியுரிமை பெற எந்தவித விண்ணப்பம் சார்ந்த நடைமுறையே இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, தகுதிவாய்ந்த தனிநபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பமோ அல்லது அதிகாரிகளோ பரிந்துரை செய்வார்கள் என்றும் அதுகுறித்த முடிவை அமைச்சரவை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Bbc

3 comments:

  1. வளர்ச்சி அடைந்து வரும் மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் எங்கயோ போய்விட்டது!85% வீதம் வெளிநாட்டவருக்கு இந்த குடியுரிமை கண்ணியம்!ஆனால் நம் நாட்டில் தான் ஒட்டு போட்டு விட்டு ஒருவேளை சோற்றுக்கு ரோட்டில் நிக்கும் நிலைமை இத்தனைக்கும் நாங்கள் இந்த நாட்டின் குடிமகன்கள்.

    ReplyDelete
  2. Kalugare. UAE engayum pohavillai, ithu oru business tricks,....tholukkum kaasukkumthaan angu mathippu kalugaare.

    ReplyDelete
  3. Nanbare... nengal solluvadu oruvidathil unmaithan oru nattil abiviruthuku raja tandirathai kayaluvadu tavarillaye? Thesiya varumanam edil Ullado adai adigaripadil tavarillaye.makkal nambi vandu tolil parpavargalum nalla thane irukirargal. Tholukku munnurimai Saudi la ye iruki.U.A.E poruta varai night club um ulladu pallivasalum ulladu terivu sevadu avaravar virupam.

    ReplyDelete

Powered by Blogger.