Header Ads



கிழக்கில் கொரோனா 1300 ஐ தாண்டியது - கல்முனை 839, மட்டு 250, திருமலை 165, அம்பாறை 33


கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் திவீரமாகிவருகின்றது. அங்கு நேற்றுவரை 1310 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 250 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 839 பேரும் திருமலை மாவட்டத்தில் 165பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 33 பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு, காத்தான்குடி இறுதியாக ஆயைடிவேம்பிலுமாக மொத்தம் 07 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

கல்முனைப்பிராந்தியத்தில் 839ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 801பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் அக்கரைப்பற்று 310, அடுத்ததாக கல்முனை தெற்கு 190 தொற்றுக்கள் பொத்துவில் 76, அட்டாளைச்சேனை 71, சாய்ந்தமருது 51, ஆலையடிவேம்பு 35, இறக்காமம் 23, சம்மாந்துறை 18, கல்முனைவடக்கு 14, திருக்கோவில் 15, நிந்தவுர் 13, காரைதீவு 13, நாவிதன்வெளி 10 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை பிராந்தியத்தில் 10க்கு குறைந்த எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப்பிரிவாக இருந்த நாவிதன்வெளிப்பிரிவில் இறுதியாக 5பேர் இனம்காணப்பட்டதன் அடிப்படையில் அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாக அதாவது 10ஆக மாறியுள்ளது.

அதேவேளை கல்முனை மாநகர எல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 255 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது.

கல்முனை தெற்கில் 190பேரும் சாய்ந்தமருதில் 51பேரும் கல்முனை வடக்கில் 14பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக சாய்ந்தமருதுப்பிரிவில் ஒருவர் இனங்காணப்பட்டதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக இவ்விதம் 51 ஆக உயர்ந்துள்ளது. கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 7வது நாளாக அமுலில் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 80 பேரும் கோறளைப்பற்றில் 65 பேரும் களுவாஞ்சிக்குடியில் 30பேரும் ஏறாவூரில் 15 பேரும் மட்டக்களப்பில் 16பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 88பேரும் மூதூரில் 42பேரும் கிண்ணியாவில் 17பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.

கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 33பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 839பேர் கல்முனை சுகாதாரப் பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கிழக்கில் 4035 5பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காரைதீவு குறூப் நிருபர்

1 comment:

  1. Whatever happens to the cremation issue, Muslims must concentrate on prevention of Corvid. Death rate among Muslims who died due to corvid19 is disproportionally high. Muslim leaders and other intellectuals should turn their eyes toward this problem.

    ReplyDelete

Powered by Blogger.