Header Ads



ஜனாஸா எரிப்பை வலியுறுத்தி, பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டம் - மக்கள் பங்கேற்காமையால் தோல்வியில் முடிந்தது


பெரும்பான்மையின மக்கள் செரிந்து வாழும் மத்துகமை பிரதேசத்தில், கடும்போக்கு அமைப்புக்கள் (தொடர் கொவிட்19 ஜனாஸா எரிப்பை வலியுறுத்தி) "ஒரே நாடு, ஒரே சட்டம்" எனும் தொனிப்பொருளில் இன்று (26) மேற்கொண்ட ஆர்ப்பாட்ட பேரணியில் சில கடும்போக்கு தேரர்கள் உள்ளிட்ட வெகு சொற்பமானவர்களே பங்குபற்றியதால் அம்முயற்சி தோல்வி கண்டிருப்பதை மேலுள்ள படத்தின்மூலம் அறிய முடியுமாக இருக்கின்றது. 

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை தூண்டிவிடுவதன் மூலம், முக்கிய விடயங்களினின்றும் சாமானியர்களை திசை திருப்பும் அதிகார முனையங்களின் செயற்றிட்டத்தின் மற்றுமொறு தோல்வியே இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு பெரும்பான்மையின மக்கள் காட்டியிருக்கும் பகிஷ்கரிப்பு.

Anas

3 comments:

  1. Buddhism teachers peace ... but these individuals spread racism and hates among human.

    ReplyDelete
  2. நாசமாக போக

    ReplyDelete
  3. பிக்குகளுக்கும் ஜனாஸா எரிப்புக்கும் என்ன தொடர்பு? ஜனாஸா எரிப்பு என்பது பௌத்த சமயமா? விளங்குதில்லையே.

    ReplyDelete

Powered by Blogger.