Header Ads



கிண்ணியாவில் கொட்டும் மழையிலும், ஜனாசா எரிப்புக்கு எதிராக சீலை போராட்டம்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

கொட்டும் கடும் மழையிலும் ஜனாசா எரிப்பினை எதிர்த்து கிண்ணியாவில் கவன் சீலைப் போராட்டம் இடம் பெற்றது. குறித்த போராட்டமானது இன்று (27) கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இடம் பெற்றது.கொரோனா மூலமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின்  ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யாமை  எரிப்பினை மேற்கொள்வது கண்டணத்துக்குரியது இதனால் மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது .சிவில் சமூக ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட இக் கவனயீர்ப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள மகஜரும் கிண்ணியா பிரதேச செயலாளரிடம் இதன் போது கையளிக்கப்பட்டது.

இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதுடன் கிண்ணியா உலமா சபை, சூரா சபை,வர்த்தக சம்மேளனம், அனைத்து பள்ளிவாயல் சம்மேளனம் உட்பட உள்ளூராட்சி மன்ற தவிசாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு வெள்ளை துணியிலான கவன் சீலை துணி துண்டுகளை கட்டி ஜனாசா எரிப்புக்கான எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.கிண்ணியா பொலிஸாரால் கவன் சீலையினால் கட்டப்பட்ட வெள்ளை நிற துணிகள் பிறகு அகற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. நல்ல பெரிய எழுத்தில் எழுதி எருமை மாடு இம்ரான் மஹ்ரூப் எழுந்திரு என்று காட்சி படுத்துங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.