Header Ads



உடல்களை அடக்குவதால் கொரோனா பரவ ஆதாரம் இல்லை, நல்லடக்கம் செய்ய இடமளிக்க வேண்டும் - மருத்துவ நிபுணர் கல்லூரி சங்கம்



சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடும் சுகாதார வழிமுறைகளின் கீழ் இலங்கையின் சகல பிரஜைகளினதும் குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம் தெரிவித்துள்ளது.

உடல்களை அடக்கம் செய்வதால் கொரோனா தொற்று பரவும் நிலைமை அதிகரிப்பதாக உறுதியான ஆதாரங்கள் இல்லை என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு, நோய்த் தடுப்பு மத்திய நிலையம் மற்றும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் நிர்வாக மத்திய நிலையத்தால் COVID-இனால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய உரிய வழிமுறைகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த உரிய வழிமுறைகளின் பிரகாரம் உடல்களை அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ முடியும் என இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம் குறிப்பிட்டுள்ளது.

5 comments:

  1. The college of community physicians of Sri Lanka reveals the truth. This body also has Buddhist doctors. They express the real science. The world is watching

    ReplyDelete
  2. ௮றிக்கையின் பிரதி ஒன்று கிடைக்குமா?

    ReplyDelete
  3. ௮றிக்கையின் பிரதி ஒன்று கிடைக்குமென்றால் பிரசுரிக்கும் படி தயவாய் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. College of Community Physicians of Sri Lanka அவரகளுடைய அறிக்கை வந்துவிடடது. இனவாதிகள் நிசப்தமாகிவிட்டனர்போல் தோன்றுகின்றது. . ஆனால் இதுவே மாற்றமாக வந்திருந்தால் இந்நேரம் புதிய வர்த்தமானப் பத்திரிகையே வந்திருக்கும்.

    ReplyDelete
  5. வைத்திய துறையில் சங்கங்கள் கூடிட்டு. இதில் உண்மையான வைத்தியமும் புதிய தொழில் நுட்பமும் தெரிஞ்ச சங்கம் எது என முதலில் மக்கள் அறியனும். இவர்களுக்கிடையில் ஒரு பரீட்சை வைத்தால் எப்படி?

    ReplyDelete

Powered by Blogger.