Header Ads



ரணில் ஐக்கிய தேசியக் கட்சியை நாசமாக்கினார், சஜித் கலாசாரத்தை நாசமாக்குகிறார் - ஜோன்ஸ்டன்


ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை நாசமாக்கினார். சஜித் பிரேமதாச நாட்டின் அரசியல் கலாசாரத்தை நாசமாக்குகிறார் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கந்தானை புனித தெரேசா மாவத்தை வீதியை 15.6 மில்லியன் ரூபா செலவில் கார்பர்ட் இட்டு புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு இன்று முற்பகல் கந்தானையில் இடம்பெற்றது. நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் நிமல்லான்ஸா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,

நல்லாட்சி காலத்தில் இரண்டாந்தர அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அவர் நீதிபதிகளுடன் பயமின்றி தொலைபேசியில் உரையாடினார். ரஞ்சன் ராமநாயக்க சகலதையும் ஒலி, ஒளிப்பதிவு செய்பவர். ஏம்மை பழி வாங்குவதற்காக நீதிபதிகளுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அதனை ஒலிப்பதிவு செய்தும் உள்ளார். சி.ஐ.டி பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் அவர் பல தடைவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளார். சிலர் மீது வழக்குத் தொடரவும். இன்னும் சிலரை சிறையிலடைக்கவும் அவர் கூறியுள்ளார். என்னையும் சிறையிலடைக்குமாறு முன்னாள் சி.ஐ.டி பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் கூறியுள்ளார். அவ்வாறே எம்மை சிறையிலடைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். கம்பஹா மாவட்ட மக்களும் அவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தனர். ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியை நாசமாக்கினார். சஜித் பிரேமதாச நாட்டின் அரசியல் கலாசாரத்தை நாசமாக்குகிறார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது எமது கட்சியை சேர்ந்த பலரும் சிறையிலடைக்கப்பட்டனர்.

எனக்கு எதிராக பதினொரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக வழக்கு போடப்பட்டது. அவரை சிறையிலடைக்கப் பார்த்தனர். அவரது மனைவியையும் சிறையிலடைக்கப் பார்த்தனர். ஏன்? அவர்களுடன் இணைந்து அமைச்சர் பதவி ஒன்றை எடுக்காமல் இருந்தமையே அதற்கான காரணமாகும். நாட்டை பாதுகாத்த மஹிந்த ராஜபக்ஷவை சிறையிலடைக்க முயன்றனர்.

ஆணைக் குழுக்களை அமைத்தனர். அவரது பாரியாரையும் சிறையிலடைக்க முயற்சி செய்தனர். ஆணைக் குழுக்களை அமைத்து விசாரணைக்கு அழைத்தனர். அவரது மகன்களான நாமல் மற்றும் யோசித்த ராஜபக்ஷ ஆகியோரை சிறையிலடைத்தனர். யோசித்த ராஜபக்ஷவை கடற்படையிலிருந்து விலக்கினர்.

பசில் ராஜபக்ஷவை சிறையிலடைத்தனர். பௌத்த தேரர்கள் 69 பேரை சிறையிலடைத்தனர். அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்த நாடு பௌத்த நாடு அல்ல என்று தெரிவித்தார். இவ்வாறு தான் அவர்கள் அன்று நடந்து கொண்டனர்.

கத்தோலிக்க மக்களை படுகொலை செய்வதற்காக குண்டுதாரிகளுக்கு இடமளிக்கப்பட்டது. இப்போது ஆணைக்குழு விசாரணைகளில் இவை தொடர்பான விபரங்கள் வெளிவருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

1 comment:

  1. நாட்டில் பொருளாதாரத்தைத்துரிதமாகக் கட்டியெழுப்பி மக்களின் வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கும் பொருட்டு அரசால் நியமனம் செய்யப்பட்ட மந்தி(ரி)களின் பேச்சைப்பார்க்கும் மக்கள் ஆச்சரியத்தோடும் பெரும் ஏமாற்றத்துடனும் தலையில் கைவைத்து தாம் விட்ட தவறை எண்ணிக் கவலைப்படுகின்றனர்.அவர்களின் கவலைக்கு விமோசனம் உண்டா, நீண்ட காலம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிவரும்.

    ReplyDelete

Powered by Blogger.