Header Ads



'மரணித்தவர்களை தகனம் செய்தல்' - பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன..?


பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் (கபூரி)

இலங்கையில் 'கொவிட் 19' வைரசினால் இறந்தவர்களை தகனம் செய்யும் விடயம் இன்று முக்கிய பேசு பொருளாக காணப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் (றுர்ழு) கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களை அவரவர்களது மத, கலாசார சம்பிரதாய நடைமுறைகளுக்கேற்ப நல்லடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ பூரண அனுமதி அளித்திருக்கும் போது, இலங்கை அரசாங்கம் குறிப்பாக சுகாதார அமைப்பினர் இன, மத, கலாசர நடைமுறைகளுக்கு அப்பால் எல்லோரையும் கட்டாயம் தகனம் செய்ய வேண்டும் என உறுதியான முடிவு எடுத்து, அதை அரச சுற்று நிரூபனமாக கெசட் பதிவிட்டு, தொடர்ச்சியாக அம்முறையிலேயே சகல உடல்களையும் தகனம் செய்து வருகின்றனர். இவ்வகையில் உடலை எவ்வகையிலும் தகனம் செய்ய முடியாது என்று மிக உறுதியாகக் கூறுகின்ற ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே. இந்த இஸ்லாத்தின் பிரகடனத்தின் அடிப்படையிலேயே இலங்கை முஸ்லிம்களும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், இன்றுவரை எவ்வித முடிவும் எட்டப்படாதுள்ளது. 'முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்பட வேண்டும். இலங்கை ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற அடிப்படையில் பேரினவாதிகளும். சில பௌத்த துறவிகளும் ஒரு சில பேரினவாத அரசியல்வாதிகளும் கூட தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். பௌத்த, ஹிந்து மதங்களில் இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு மத ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, அது மிக முக்கிய சடங்காகவும் காணப்படுகின்றது. ஆனால் சர்வதேச ரீதியாக, முஸ்லிம்களை பொறுத்தவரையில் தகனம் செய்வது தடுக்கப்பட்டுள்ளதுடன், எம்மைக் கொல்லவரும் பிராணிகளைக் கூட சுட்டெரிக்க முடியாது என்பதை இக்கட்டுரை வரலாற்று ரீதியாக நிறுவுகின்றது. 


தகனம் செய்வது (ஊசநஅயவழைn) என்பது, இறந்த உடல்களை பூமியில் குழிதோன்டிப் புதைப்பதற்கு பதிலாக, நெருப்பினால் பொசுக்கி சாம்பலாக்குவதை குறிக்கின்றது. இந்தியான நோபாளம் போன்ற நாடுகளில் இவ்வாறு இறந்த மனிதர்களின் உடல்களை தகனம் செய்வது, திறந்த வெளியரங்கில் செய்யப்படும் மிக நீண்ட வரலாறு கொண்ட சம்பிரதாயங்களாகக் காணப்பட்டது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வாறு இறந்த உடல்களை தகணம் செய்வது உலகின் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. அல்லது, இந நாடுகளில்;; வழக்கிழந்திருந்து மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. நவீன காலத்தில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள, தகணம் செய்யக்கூடிய சூளைகளில் (ளுரசகயஉந) இச் செயற்பாடு, மிக இலகுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு தகனம் செய்யப்பட்டபின் தகனம் செய்யப்பட்ட உடலிலிருந்து சாதாரணமாக 2.4 கி.கிராம் (5.3 இறாத்தல்) நிறையுடைய சாம்பல் துகள்கள் சேகரிக்கப்படுகின்றன. இவை உண்மையில் தகனம் செய்யப்பட்ட உடலின் சாம்பல் துகள்கள் அல்ல. உண்மையில இவை சுட்டு எரிக்கப்படாத – எரிக்க முடியாத உடம்பின் முள்ளுப் பகுதியிலிருந்து சேகரிக்கப்படுபவைகளாகும். இவை பொதுவாக பவுடரில் கலந்து வருகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் சாம்பல் துகள்கள் இறந்தவரின் உறவினர்களால் ஒரு ஞாபகார்த்த இடத்தில் வைக்கப்படும். இந்துக்களின் வழக்கப்படி இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்த மறுநாள் அல்லது மூன்றாம் நாள் 'காடாத்து' (காடு – ஆற்று) என்னும் கிரியை நடக்கிறது. காடாற்று என்பது பூதவுடல் எரித்ததினால் சுடு சாம்பலை ஆற்றுதல் எனப் பொருள் படும். அனேகமாக சுடுகாடு, கடல், ஆறு, குளம் போன்றவற்றை அன்மித்தே இருக்கும். எரித்த இடத்தில் உள்ள எலும்புகள் சாம்பல்கள் என்பவற்றை நிர் நிலைகளில் சங்கமிக்கச் செய்வதற்கு எரித்த இடம் ஆற்றுப் பெறுதல் அவசியம். சுடுகாடு என்பது  பூதவுடலை அடக்கம் செய்யும் இடமெனவும் பொருள் பெறும். தகனம்  செய்யப்பட்ட பின் பிணத்தை படுக்க வைத்த இடத்தில் எல்லா எலும்புகளும் எரிந்த இடம் வெள்ளை நிற சாம்பராக ஒரு ஆளின் உருவமாக தெரியும். 

கடமைகள் செய்தவர், பூதவுடலைத் தகனம் செய்யப்பட்ட இடத்தில் முழு உருவமும் இருப்பதாக பாவனை செய்து, மேற்கே பார்த்;தவாறு கால் பகுதியில் இருந்து, தலை நோக்கி  புறங்கையால் அபிஷேகம் செய்வார். பின்னர் முழங்கால்கள், தொப்புள், மார்பு, நெற்றி, தலை ஆகிய ஐந்து இடத்திலும் திருநூறு, சந்தனம், மலர்கள் வைத்து தூப தீபம் காட்டி வணங்கியபின் குறிப்பிட்ட ஐந்து இடங்களிலும் இருக்கும் எலும்புகளை ஒழுங்காக எடுத்து தலைமாட்டில் உள்ள பாலுள்ள கலசத்தில் வைப்பார். புpன்னர் மிகுதி எலும்புகள் எல்லாவற்றையும் தவறவிடாது ஒன்றாக ஒரு பாத்திரத்தில் அல்லது கடகத்தில் எடுப்பார்கள். பின் அந்த இடத்தை சுத்தம் செய்வார்கள். கலசத்தில் எடுத்த சாம்பல், எலும்புகள் எல்லாவற்றையும் கடலில் போட்டு கரைத்து விடுவார்கள். 

இவ்வாறு தகனம் செய்யும் வழக்கம் உலகில் 17,00 ஆண்டுகளுககு; முன்பிருந்தே அறிமுகம் செய்யப்பட்டதாக, அகழாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக துறைசார் நிபுணர்கள் எழதியுள்ளார்கள். இவ்வாறாக தகனம் செய்யப்பட்ட உடல் ஒன்று அவுஸ்த்திரேலியாவில் 'லேக் முன்கோ' (டுயுNமுநு ஆருNபுழு) பகுதியில் கண்டெடுக்கப்பட்டமையே மிகப் பூர்வீக வரலாறாக கருதப்படுகின்றது. வரலாற்று ரீதியாக இறந்த உடலைத் தகனம் செய்வதைப் போலவே. பூமியில் புதைக்கின்ற (டீரசயைட) வழக்கமும் இருந்து வருகின்றது. 

மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் உடல்களை அடக்கம் செய்கின்ற வழக்கமும், தகனம் செய்கின்ற வழக்கமும் தொடர்ச்சியாக இருந்து வந்தமைக்கான அகழாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறெனினும் ஒவ்வொரு நாடுகளிலிருந்த ஒவ்வொரு கலாசாரப் பிரவுகள் தமக்கேற்றவாறு இவற்றை அனுசரித்து வந்துள்ளன. அல்லது தமக்கிடையே தடை செய்து வந்ததையும் அறிய முடிகின்றது. மத்திய கிழக்கு நாடுகளிலம், ஐரோப்பாவிலும் தொடர்ச்சியாக இருந்த Nநுழுடுஐவுர்ஐஊ யுகம், ணுழுசுழுயுளுவுசுஐயுN கிரேக்க யுகங்களிலும் இவ்விரு வழி மறைளும் மாறி மாறி செயற்பாட்டில் இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ யுகம் தோன்றும் வரையிலும், பிணங்களை புதைப்பது மட்டுமே நடைமுறையில் இருந்த வந்தது. ரோமர்கள் இவ்விரு வழிமுறைகளையும் கைக் கொண்டார்கள். 

ஹிந்து மதமும் ஜயினிஸம் (துயுஐNஐளுழுN) மதமும் தகனம் செய்வதை அனுமதித்ததுடன், அதை முதன்மைப்படுத்தியும் வந்தது. இந்தியாவில் தகனம் செய்யும் நடைமுறை கி.மு. 1900ம் ஆண்டளவில்  இருந்தமைக்கான ஆதாரமும், அது பற்றிய குறிப்புக்கள் ரிக்வேத குறிப்புக்களிலும் காணப்படுகின்றன. 

ஐரோப்பாவில் கிறிஸ்த்தவ யுகத்தின் எழச்சியோடு தகனம் செய்யும் வழக்கம் முடிவுக்கு வந்தது. யூதமத கலாச்சாரத்தின் தாக்கம், மறுபிறப்பு பற்றிய கொள்கை கிறிஸ்து நாதர் அடக்கம் செய்யப்பட்ட விடயங்கள் எல்லாம் தகனம் செய்வதை தடை செய்த காரணங்களாகும். மத்திய காலப்பகுதியில் ஐரோப்பாவின் சில நாடுகளில் தகனம் செய்வது சட்டரீதியாக தடை செய்யப்பட்டதுடன் மரண தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. இவ்வாறு தகனம் செய்வுது ஓர்  மோசமான குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையாகவும் பிரகடனம் செய்யப்பட்டது. உதாரணமாக இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 'ஜோன் வைக்கிளிப்' (துழுர்N றுலுஊடுகுகு) என்பவர் மரத்தில் கட்டப்பட்டு, தகனம் செய்யப்பட்;;டு, அவரது சாம்பல் ஆற்றில் வீசப்பட்டது.  

இருபதாம் நூற்றாண்டில் பல கிறிஸ்தவ நாடுகளில் தகனம் செய்யும் முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள பிரபல கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த மிக சிரேஸ்டமான பிஸப்பான 'வில்லியம் டெம்பிள்' (றுடைடயைஅ வுநஅpடந) என்பவர் 1944ம் ஆண்டில் இறந்த பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ரோமன் கத்தோலிக்க மதப்பிரிவினரும் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடைமுறையை ஏற்றுக் கொண்டார்கள். 1963ம் ஆண்டில் இரண்டாவது வத்திக்கான் கவுன்ஸிலின் பாப்பாண்டவர் ஆறாவது போல் தகனம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார். 

1960ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் பிரித்தானியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா. பின்லாந்து போன்ற நாடுகளில் தகனம் செய்யும் முறை, அடக்கம் செய்வதைவிட அதிக செல்வாக்குப் பெறத் தொடங்கியது. தகனம் செய்வது அடக்கம் செய்வதால் ஏற்படும் பாரிய செலவை விட குறைவானது என்ற விடயம் முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பல கிறிஸ்தவ நாடுகளில் தகனம் செய்வதற்கு சார்பான நிலைப்பாடும், எதிர் நிலைப்பாடும் தொடர்ந்து நிலவி வந்தது. கிறிஸ்தவ நாடுகளிலும் அவர்களது கலாசார பின்னணியிலும் தகனம் செய்வது வெறுப்புக்குரியதாகவே காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தின் சில பிரிவுகள் தகனம் செய்வதை நிராகரிக்கின்றன. குறிப்பாக சிறுபான்மை கிறிஸ்தவ  பிரிவினராக புரடொஸ்தன் பிரிவினரும், பழமைவாதிகளும் (ழுசுவுர்ழுனுழுஓ) தகனம் செய்வதை தடை செய்துள்ளார்கள்.

யூதமதம்

யூதமதம் தகனம் செய்வதை அனுமதிக்கவில்லை. அதுமட்டுமன்று பண்டைய எகிப்தியர்கள் செய்தது போல் இறந்த உடல்கள் 'மம்மிக்களாக பாதுகாத்து வைப்பதாகும்' பதனிட்டு பாதுகாப்பதையும் அனுமதிக்கவில்லை. இஸ்ரேல் நாட்டில் ஒரு இறந்த மனிதனின் உடலை சகல மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்வதற்கான இலவச ஏற்பாடுகள் அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ளன. 


இந்திய மதங்களும்; தகன கிரியைகளும். 

இந்திய மதங்களான ஹிந்து மதம், பௌத்தம், ஜயினிஸம் (துயுஐNஐளுஆ), சீக்கிய மதம், என்பன தகனம் செய்வதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஹிந்து மதத்தைப் பொறுத்தவரை, 'ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது வெற்றுடலை பாதுகாப்பது அவசியமற்றது' எனக் கருதுகின்றது. தகனம் செய்வதன் மூலம் ஒரு இறந்தவனின் ஆத்மா விரைவாக வெளியாகி, அவனது மறு பிறப்பு வெற்றியாக அமைய உதவும். என ஹிந்துக்கள் நம்புகின்றனர். 

பௌத்த மத ஸ்;தாபகரான புத்தரும் தகனம் செய்யப்பட்டமை வரலாறாகும். புத்தர் தகனம் செய்யப்பட்ட விடயமோ, பௌத்த மதத்தில் தகனம் செய்யும் செயற்பாடு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முக்கிய காரணியாகும்.  ஹிந்துக்கள் பெரியவர்களின் இறந்த உடலை தகனம் செய்;தாலும் , சிறுவர்களின் உடலை அ,டக்கம் செய்கின்றனர். பௌத்தர்களிடத்தில் தகனம் செய்கின்ற வழக்கம் அதிகமாக காணப்பட்டாலும், அடக்கம் செய்கின்ற நடைமுறையும் அனுமதிக்;கப்பட்டுள்ளது. பௌத்தர்களிடத்தில் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது போல் சட்டங்களும், ஒழுங்கு முறைகளும் திட்டவட்டமாக வரையறை செய்யப்ப்டாததால் தமக்கு விரும்பியவாறு மரபுகளையும். நடைமுறைகளையும் கைக் கொண்டு வருகின்றனர். ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது உணர்வுகளுக்கும்  அவனது உடலுக்கும் எவ்வித தொடர்புமில்லை என நம்புகின்றனர். பௌத்தர்கள் மறு பிறப்புக் கொள்கையை கொண்டவர்களாக காணப்படுவதால். இறப்;;பு என்பது ஒரு மனிதனின் வாழ்வு சங்கிலியின் ஒரு ப்குதி மட்டுமே என பூரணமாக நம்புகின்றனர். பரலோக வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளது. இவ்வுலகத்தில் இறந்த மனிதனின் நல்லடக்கம் பற்றிய சிந்தனைகள் அவர்களிடத்தில் இல்லை. பௌத்தர்களிடத்தில் தகனம் செய்வது கட்டாயப்படுத்தப்படவில்லை. திபேத்திய நாட்டு பௌத்தர்களிடத்தில் ஒரு மனிதன் இறந்த பிறகு நான்கு நாட்கள் பிணத்தை வைத்திருக்கும் செயற்பாடு காணப்படுகின்றது. அவனது ஆத்மா தொடர்ந்தும் உடலோடு இருப்பதாகவும் அது அவனது உடலை விட்டுப் பிரிய சில நாட்கள் செல்லும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். சில பௌத்தர்களிடத்தில் தகனம் செய்வதற்கு ஒரு மாதமும் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. 

இறுதி நல்லடக்கவும் இஸ்லாமும்

தகனம்; செய்வது இஸ்லாத்தில் முற்றாகத் தடுக்கப்பட்ட ஹறாமாகும். அதுமட்டுமல்ல ஒரு இறந்த மனிதனின் நரம்பு, முள்ளுகளை உடைப்பதோ, அதன் மேல் இருப்பதோ, நடப்பதோ, தடுக்கப்பட்டவையாகும். இவ்வாறான செயற்பாடுகள் அதிக தண்டனைக்குரிய குற்றங்களாகவும், பெரும் பாவமாகவும் இஸ்லாம் கருதுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ஒரு மனிதனின் இறந்த உடம்பின் எலும்பை முறிப்பது, அவன் உயிரோடு இருக்கும் போது அவனது உடம்பின் எலும்பை உடைப்பது போலாகும்.' இதன் மூலம் ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது எவ்வாறு அவனது உடலுக்கு தீங்கு செய்யக் கூடாதோ, அவ்வாறே இறந்த பின்pனும் அவனது பிணத்துக்கும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. 

ஒரு மனிதனை உடல் ரீதியாக காயப்படுத்துவது பெரும் குற்றமாக இஸ்லாத்தில் கருதப்படுகின்றது. மேற்கண்ட ஹதீதுக்கு விளக்கமளிக்கும் இமாம்களான இப்னு மாஜா, இப்னு ஸயூத்தி அவர்கள் 'ஒரு மனிதன் இறந்த பிறகும், அவன் உயிரோடு இருக்கும் போது அனுபவ ரீதியாக இருந்தது போன்றே இறந்த பிறகும் அனுபவிக்கிறான்' என்று கூறியுள்ளார்கள். 

எனவே எவ்வகையிலும் மரணித்த உடல்களை தகனம் செய்வதற்கு இஸ்லாத்தில் எவ்வித அனுமதியுமில்லை. இப்பிரகடணம் இஸ்லாத்தின் வரலாற்றில் இருந்து செய்யப்பட்ட பிரகடணமாகும். ஏனைய மதங்களைப் பொறுத்தவரையில் தகனம் செய்வது அல்லது நல்லடக்கம் செய்வது சம்பந்தமான நிரந்தரமான எவ்வித முடிவும் காணப்படவில்லை  என்பதை இவ்வாய்வில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.



1 comment:

  1. மேட்க்கூறிய கருத்துக்கள் உண்மை. ஆனால் கிறிஸ்தவத்தில் மனிதன் மரித்த பின்னர் அவனுக்குரிய தண்டனை நன்மைக்கோ, தீமைக்கோ நியாயத்தீர்ப்புதான். அதட்கிடையில் எந்த தண்டனையும் கொடுக்கப்பட்டு சுவர்க்கத்துக்கு போக முடியாது.

    இந்த பக்கத்தில் கருது எழுதிய நசீர் அஹமட் அவர்கள் , முஸ்லீம் முறைப்படி அடக்கம் செய்த பின்னர் மலக்குகள் வந்து அவர் செய்த குற்றங்களுக்காக தண்டனை கொடுத்து சுவர்க்கத்துக்கு கொண்டு செல்வதாக. அப்படி என்றால் இந்த உலகில் என்ன அநியாயம் செய்தாலும் அவர்கள் மரித்த பின்னர் தண்டிக்கப்பட்டு சுவர்க்கம் செல்ல முடியுமா? உலக இன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவித்தாலும் சுவர்க்கம் கிடைக்குமா?

    ReplyDelete

Powered by Blogger.