Header Ads



சிறுவயதில் தாயை இழந்து, தடைகளை உடைத்து, சாதனை சாதித்துக்காட்டிய முஹம்மது உசாமா - டாக்டர் ஆகுவதே இலட்சியம் என்கிறார்

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

வெளியான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றின்படி கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த விசேட கல்விப் பிரிவில் தோற்றிய முஹம்மது சமீர் முஹம்மது உசாமா எனும் மாணவன் 158 புள்ளிகளை பெற்று தனக்கும் தனது பாடசாலைக்கும் பெறுமை சேர்த்து சாதனை படைத்துள்ளார். 

பாடசாலையின் அதிபர் பி.அப்துல் றவூப் தலைமையின் கீழ் கண்காணிக்கப்பட்ட விசேட கல்விப் பிரிவில் ஆசிரியர்களாக ஏ.எஸ்.எம்.சாஹா,கே.எஸ்.சிவராசா, ஆசிரியை ஏ.அஸ்மினா போன்றோர்களின் சிறந்த வழிகாட்டுதல்களே குறித்த மாணவனின் பெறுபேற்றுக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகிறது.

தனது தாயை சிறுவயதில் இழந்த குறித்த மாணவன் தனது கல்வியினை கற்பதற்காக தனது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இவர் மூன்று சக்கர நாற்காலி ஊடாகவே பாடசாலைக்கு தன்னை தனது வளர்ப்புத் தாய் அழைத்துச் செல்வதாகவும் முற்சக்கர இயந்திர மோட்டார் வண்டி ஊடாகவும் தனியாகவும் வந்து தனது கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

தன்னால் நடக்க முடியாத விசேட தேவையினை கொண்டதாக இருந்தாலும் கல்விக்கு ஊனமுற்றிருப்பதும் வறுமை போன்றன தடையல்ல எதிர்காலத்தில் சிறந்த வைத்தியனாக வருவதே எனது இலட்சியமாகும் என முஹம்மது உசாமா தெரிவித்தார். 

1 comment:

  1. Allah Akbar. Ya Allah! bolster this kid & make him pious. Grant him the fortitude & financial sufficiency to achieve his goal! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.