Header Ads

மாடறுப்பதை தடைசெய்தால் காளை மாடுகளின், பெருக்கத்தை அரசு என்ன செய்யப்போகின்றது..? பாராளுமன்றில் கேள்வி

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் பசுவதையை தடைசெய்ய எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் காளை மாடுகளை என்ன செய்வதென்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டை கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவை விதிப்பனவு மற்றும் துறைமுக,விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு கட்டளைச்சட்டம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாடறுப்பை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. கால்நடையையும் விவசாயத்தையுமே எமது மக்கள் நம்பி இருக்கின்றனர். பசுவதை என்பது தடுக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் காளை மாடுகளை என்ன செய்வதென்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டு்ம். எமது விவசாயிகள் கால்நடைகளை வைத்துக்கொண்டுதான் அவர்களின் பெண் பிள்ளைகளுக்கு திருமணத்துக்கு சீதனமாக கொடுப்பது வழக்கம்.

அத்துடன் எமது பிரதேசத்தில் கால்நடைகளின் பெருக்கம் இன அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கையில் அது அதிகரித்திருப்பதை காண்கின்றோம்.அதனால் மாடுகளை அறுப்பதை தடைசெய்கின்ற அதேநேரம், இந்த காளை மாடுகளின் பெருக்கத்தை அரசாங்கம் எவ்வாறு தடைசெய்யப்போகின்றது என்பதையும் அறிவிக்கவேண்டும். அரசாங்கம் எழுந்தமானமாக இவ்வாறு தீர்மானம் எடுக்கின்றபோது எமது விவசாயிகளே பாதிக்கப்படுவார்கள்.

மேலும் பால் உட்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையை பாராட்டுகின்றேன். அதேநேரம் அரசாங்கத்தின் மாடறுப்பு தடையினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் எமது மீனவர் சமூகத்தின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. ஒருபக்கம் இந்திய தோழர்களின் வருகை மறுபக்கம் தென்னிலங்கை மீனவர்களின் வருகை. இன்னொரு பக்கம் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் தொடர்பில் அதிகம் கெடுபிடிகளை ஏற்படுத்துவதும் எமது பிரதேசத்திலாகும்.

அதனால் அனைத்து பக்கங்களாலும் எமது பிரதேச மீனவர்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர். இந்த அரசாங்க காலத்தில் மாத்திரமல்ல கடந்த அரசாங்க காலங்களிலும் எமது மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அவர்கள் தங்களது தொழிலை தடைகள் இன்றி கொண்டுசெல்ல இடமளிக்க மறுத்து வந்திருக்கின்றது. எனவே அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும்போது எமது பிரதேசத்தில் அன்றாடம் உழைத்துவரும்  மக்கள் மீதும் கருணைசெலுத்தவேண்டும் என்றார்.

12 comments:

  1. TNA க்கு வேற வேலை வெட்டியொன்றும் இல்லை போல.

    தேவையற்ற மாடுகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துவது தானே.

    ReplyDelete
  2. மாடறுப்பு தொடர்பாக பொதுவான எதிர் நிலைபாட்டை உருவாக்கும் முயற்சிகள் இடம் பெறவில்லை. முஸ்லிம் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட இதுவரை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் ஜெவிபி போன்ற இடதுசாரிகளுடனும் அமைப்பு ரீதியாக பேசவில்லை என்பது கவலை தருகிறது.முஸ்லிம் தலைமை தீவிரமாக செயற்பட வேண்டிய தருணம் இதுதான்.

    ReplyDelete
  3. Kaalai maadugala....illegala saapiduruvanga illegala arutthu saapduvaangappu..... neenga vera kelvi kettukittu... Ithula ennenna oru kallila pala maangos... No.1. Modiya hapiyaakkuwathu, No.2. Indiya kudukkum pitchaikku, kai maaru seithu anga irunthu iraichi vaanguvathu, No.3. Nalla oru business paarppathu, No.4. Recist ellorayum kushi paduttuvathu, No.5. Lankavula mulaikkum RSS terrorist gala utsaahappaduttuvathu.... innum innum.... Nevermind we nevermind....

    ReplyDelete
  4. தமிழர்களின் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்ற போது 1001 ஆக இதையும் இணைத்துக் கொண்டனர். சபாஷ் தமிழ் மாடுகள்.

    ReplyDelete
  5. முஸ்லிம் தலைவர்கள் ஏன் தீவிரமாக செயற்பட வேண்டும்? இது முஸ்லிம்களுக்குரிய தனிப்பட்ட பிரச்சினையா? இளநீர் குடிப்பவர்கள் எங்கோ இருக்க கோம்பை சுமக்க முஸ்லிம்களா?

    ReplyDelete
  6. மாடு அறுப்பதற்கு தடை

    முஸ்லிம்களை பழிவாங்க கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் தொடர்பாக முஸ்லிம்கள் பேசாமல் இருப்பது சிறந்தது என்பது எனது அபிப்பிராயம். உங்களுடைய அபிப்ராயங்கள் மாறுபட்டதாக இருக்கலாம்.

    * இதனால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களை விட தமிழர்களும் சிங்களவர்களும் ஆவர்.

    * முக்கியமாக இங்கு முஸ்லிம் இறைச்சிக் கடை முதலாளிக்கு பாதிப்பு உள்ளது.

    * மேலும் பிரதேச சபைகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட உள்ளது.

    முஸ்லிம்களின் உணவுக்கு மாட்டை விட்டு விட்டு ஆடு,கோழி போன்ற உணவுகளை உட்கொள்ள எந்த விதமான தடைகளும் இல்லை என்பதை மற்ற இனத்தவர்கள் புரிந்து கொண்டால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

    மேலும் இங்கு மிக முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடயம்.

    * மாடு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    * எனவே முஸ்லிம்களுக்கு மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.

    இங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால்!

    அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நிறைய விடயங்கள் திரைக்கு அப்பால் நடந்து கொண்டே இருக்கின்றன.

    இதை நோக்கும்போது அரசாங்கத்தினால் எவ்வாறான உத்தரவாதத்தையும் நூற்றுக்கு நூறு வீதம் கொடுக்க முடியாது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    முஸ்லிம் பிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகளை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    தண்டனைகள்

    இவ்வாறு முஸ்லிம்
    பிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், தண்டனைகள் கிடைக்கலாம்,

    * ஆனால் மரண தண்டனை கொடுக்க மாட்டார்கள். (இந்தியாவில் Ajan அஜன் கொடுப்பதுபோல்.)

    யாருக்கு இலாபம்

    1. மாட்டு இறைச்சி இறக்குமதியாளர்கள்
    2. மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி பத்திரம் வழங்குபவர்கள்
    3. முஸ்லிம்கள்- சலுகை விலை, உள்நாட்டில் மாடுகளின் விலை குறைதல்
    4. ஆட்டு பண்ணையாளர்கள்
    5. கோழிப் பண்ணையாளர்கள்

    யாருக்கு நஷ்டம்

    1. மாட்டுப் பண்ணையாளர்கள்
    2. கிராமிய விவசாயிகள்
    3. மாட்டிறைச்சி கடை வியாபாரிகள்
    4. இறைச்சி தொழிலாளிகள்
    5. பிரதேச சபைகள்
    6. குர்பானி கொடுக்கும் முஸ்லிம்கள்
    7. முஸ்லிம்களுக்கு மாடுகளை விற்கும் தமிழர்கள்
    8. முஸ்லிம்களுக்கு மாடுகளையும் விற்கும் சிங்களவர்கள்

    உண்மை சம்பவம்

    நாங்கள் ஒரு பசுமாட்டை நீண்ட நாட்கள் வளர்த்து வந்தோம். அதில் பால் அருந்தினோம்.

    அதை இறைச்சிக் கடைக்கு கேட்டார்கள்...

    எங்களுக்கு அதை இறைச்சி கடைக்கு விற்பனை செய்ய விருப்பமில்லை.

    எனவே அதை குறைந்த விலைக்கு ஒரு தோட்டத்துக்கு விற்பனை செய்தோம்.

    ஒரு மாதத்துக்கு பின்னர் கேள்விப்பட்டோம். நாம் குறைந்த விலைக்கு விற்பனை செய்த அந்த
    பசு மாட்டை அதிக விலைக்கு இறைச்சி கடைக்கு விற்பனை செய்துள்ளார்.

    “இதுதான் திரைக்கு அப்பால் நடக்கும் உண்மை”

    சைவ உணவு உண்பவர்கள் தனது மாடுகளை பண்ணையாளர்களுக்கு அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்வது பொதுவான வழக்கம்.

    இறுதியில் அந்த மாடுகள் இறைச்சிக் கடைக்கு செல்கின்றன.

    “நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த கிழட்டு மாடுகளின் விற்பனை வருமானம் மாட்டு இறைச்சி மூலமே நம்மை அடைகின்றன”

    “யாருக்கு இந்த யதார்த்தமான உண்மையை புரிந்து கொள்ள முடியுமோ அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள்”

    எனவே முஸ்லிம்களை பொறுத்தவரை இதில் பெரிதாக ஒரு நஷ்டமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  7. இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் தமது உரிமைகளை வலியுருத்தி போராடியாதாக சரித்திரம் இல்லை.

    ஆனால், ஒரே ஒரு முறை 2011 யில் முஸ்லிம்கள் போராடினார்கள். மாபெரும் போராட்டம்.
    எப்படி? கொழும்பில் பெரிய ஆர்பாட்ட ஊர்வலம், இலங்கை முழுவதும் கையெழுத்து வேட்டை, தலைவர் முஸ்லிம் நாடுகளுக்கு தமக்கு ஆதரவு தேடி பயணங்கள்.
    எதற்கு? யுத்தினால் பாதிக்கபட்ட தமிழர்களுக்கு எதிராகவும், ராஜபக்‌ஷவுக்கு ஆரவாகவும்.

    இப்ப நிலமை எப்படி? ராஜபக்‌ஷக்கள் தேவை முடிந்ததும், free பிரியாணியும், தண்ணியும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள், பிறகு ஊர் ஊராக நல்ல அடி கொடுத்தார்கள், இப்போ பதவிகளையும் பறித்துவிட்டார்கள்

    ReplyDelete
  8. Selvam is a christian and Jeyapalan too.
    There is no point in talking about "Cow slaughter ban" as being minority groups, Muslim & Christian
    Let Buddhist and Hindus to work out this issue.
    They want the BAN
    At end Buddhist and Hindu farmers will suffer.
    If beef is not available, buy goat meat or chicken.

    ReplyDelete
  9. Iya jeyapalan, Muslim thalaivarhal madaruppu sampanthamaha ethuvum pesa vendiya thevai illai. Ithu nattin porullatharam Sarntha pirachinai. We have to face this problem. our community living percentage in my mother land it's not for our worries.

    ReplyDelete
  10. முஸ்லீங்களுக்கு மாடு தேவையுமில்லை. முஸ்லீம் தலைமைகள் பேசத்தேவையுமில்லை. நாம் மாட்டுக்கு நாட்டைக்கொடுத்து விட்டு காட்டில் போய் வாழத் தயார்.

    ReplyDelete
  11. நாகரீகமற்ற சில முஸ்லீங்களின் வாய் மற்றும் எழுத்தினைக்ககொண்டு தமிழ் மற்றும் மூஸ்லீங்களின் உறவினை விசாலப்படுத்தும் நோக்கில் அஜன் என்ற புனைப்பெயர் கொண்ட உளவாளி பயன் படுத்தப்படலாம், என்ற விடயம் நாகரிமானதும் நிதானமானதுமான முஸ்லீங்களுக்குப்புரியும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. மாடு அறுப்பதற்கு தடை

    முஸ்லிம்களை பழிவாங்க கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் தொடர்பாக முஸ்லிம்கள் பேசாமல் இருப்பது சிறந்தது என்பது எனது அபிப்பிராயம். உங்களுடைய அபிப்ராயங்கள் மாறுபட்டதாக இருக்கலாம்.

    * இதனால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களை விட தமிழர்களும் சிங்களவர்களும் ஆவர்.

    * முக்கியமாக இங்கு முஸ்லிம் இறைச்சிக் கடை முதலாளிக்கு பாதிப்பு உள்ளது.

    * மேலும் பிரதேச சபைகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட உள்ளது.

    முஸ்லிம்களின் உணவுக்கு மாட்டை விட்டு விட்டு ஆடு,கோழி போன்ற உணவுகளை உட்கொள்ள எந்த விதமான தடைகளும் இல்லை என்பதை மற்ற இனத்தவர்கள் புரிந்து கொண்டால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

    மேலும் இங்கு மிக முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடயம்.

    * மாடு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    * எனவே முஸ்லிம்களுக்கு மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.

    இங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால்!

    அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நிறைய விடயங்கள் திரைக்கு அப்பால் நடந்து கொண்டே இருக்கின்றன.

    இதை நோக்கும்போது அரசாங்கத்தினால் எவ்வாறான உத்தரவாதத்தையும் நூற்றுக்கு நூறு வீதம் கொடுக்க முடியாது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    முஸ்லிம் பிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகளை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    தண்டனைகள்

    இவ்வாறு முஸ்லிம்
    பிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், தண்டனைகள் கிடைக்கலாம்,

    * ஆனால் மரண தண்டனை கொடுக்க மாட்டார்கள். (இந்தியாவில் Ajan அஜன் கொடுப்பதுபோல்.)

    யாருக்கு இலாபம்

    1. மாட்டு இறைச்சி இறக்குமதியாளர்கள்
    2. மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி பத்திரம் வழங்குபவர்கள்
    3. முஸ்லிம்கள்- சலுகை விலை, உள்நாட்டில் மாடுகளின் விலை குறைதல்
    4. ஆட்டு பண்ணையாளர்கள்
    5. கோழிப் பண்ணையாளர்கள்

    யாருக்கு நஷ்டம்

    1. மாட்டுப் பண்ணையாளர்கள்
    2. கிராமிய விவசாயிகள்
    3. மாட்டிறைச்சி கடை வியாபாரிகள்
    4. இறைச்சி தொழிலாளிகள்
    5. பிரதேச சபைகள்
    6. குர்பானி கொடுக்கும் முஸ்லிம்கள்
    7. முஸ்லிம்களுக்கு மாடுகளை விற்கும் தமிழர்கள்
    8. முஸ்லிம்களுக்கு மாடுகளையும் விற்கும் சிங்களவர்கள்

    உண்மை சம்பவம்

    நாங்கள் ஒரு பசுமாட்டை நீண்ட நாட்கள் வளர்த்து வந்தோம். அதில் பால் அருந்தினோம்.

    அதை இறைச்சிக் கடைக்கு கேட்டார்கள்...

    எங்களுக்கு அதை இறைச்சி கடைக்கு விற்பனை செய்ய விருப்பமில்லை.

    எனவே அதை குறைந்த விலைக்கு ஒரு தோட்டத்துக்கு விற்பனை செய்தோம்.

    ஒரு மாதத்துக்கு பின்னர் கேள்விப்பட்டோம். நாம் குறைந்த விலைக்கு விற்பனை செய்த அந்த
    பசு மாட்டை அதிக விலைக்கு இறைச்சி கடைக்கு விற்பனை செய்துள்ளார்.

    “இதுதான் திரைக்கு அப்பால் நடக்கும் உண்மை”

    சைவ உணவு உண்பவர்கள் தனது மாடுகளை பண்ணையாளர்களுக்கு அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்வது பொதுவான வழக்கம்.

    இறுதியில் அந்த மாடுகள் இறைச்சிக் கடைக்கு செல்கின்றன.

    “நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த கிழட்டு மாடுகளின் விற்பனை வருமானம் மாட்டு இறைச்சி மூலமே நம்மை அடைகின்றன”

    “யாருக்கு இந்த யதார்த்தமான உண்மையை புரிந்து கொள்ள முடியுமோ அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள்”

    எனவே முஸ்லிம்களை பொறுத்தவரை இதில் பெரிதாக ஒரு நஷ்டமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.