Header Ads



பாராளுமன்றத்திற்கு உள்ளும் கொரோனா கட்டுப்பாடு - விசேட உரையாற்றிய சபாநாயகர்


நாட்டில் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ள கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கேட்டுக் கொண்டுள்ளார். 

பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே சபாநாயகர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். 

அதன்படி பாராளுமன்றத்திற்கு வந்து சபை அமர்வுகளில் கலந்துக்கொள்ளும் போதும், வெளியிலும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். 

விருந்தினர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதை தவிர்க்குமாறும், சுகாதார வழி முறைகளுக்கு அமைய அத்தியாவசியம் என கருதப்பபடும் அரச அதிகாரிகளை மாத்திரம் அவைக்கு அழைக்குமாறும் சபாநாயகர் கோரியுள்ளார். 

அதற்கும் மேல் பாராளுமன்ற அலுவலகர்கள், பாராளுமன்ற ஊடகவியலாளர்கள், உபசரிப்பாளர்கள், மற்றும் சேவை வழங்குநர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட பாராளுமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் சபாநாயகர் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.