Header Ads



உலகளாவிய நிதி மூலஸ்தானமாக, இலங்கை நிறுவப்படும்


கொழும்பு பங்கு பரிவர்த்தனை மற்றும் இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து அறிமுகப்படுத்தும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது.

‘எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்’ (Hyper leap to the future) என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், டிஜிட்டல்மயப்படுத்த பங்குச்சந்தையை திறந்து வைக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.

அங்கு நினைவு குறிப்பொன்றை முன்வைத்த கௌரவ பிரதமர், கொழும்பு பங்குச்சந்தையினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளத்தை இணையத்தில் வெளியிட்டார்.

டிஜிட்டல்மயப்படுத்தப்பட்டதன் ஊடாக புதிய முதலீட்டாளர்களுக்கு கிளை காரியாலயங்களுக்கு செல்லாது மத்திய வைப்பொன்றை ஆரம்பித்துக் கொள்ளலாம்.

அதற்கமைய கொழும்பு பங்கு பரிவர்த்தனை கையடக்க தொலைபேசி பாவனையின் ஊடாக நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை அல்லது தரகு நிறுவனங்களுக்கு செல்லாது கணக்குகளை ஆரம்பிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புதிய முதலீட்டாளர்களுக்கு பங்கு கொடுக்கல் வாங்கல்களுக்கு தடையாக விளங்கிய தொலைதூரம் என்ற விடயம் இல்லாது போகும்.

டிஜிட்டல்மயப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் பெருந்திரளான தகவல்களை உள்ளடக்கி கொழும்பு பங்கு பரிவர்த்தனை, மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் இணையத்தளம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் முதலீடு, கல்வி, நிதி எழுத்தறிவு என்பவற்றை இலக்காக கொண்டு இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிமுகப்படுத்தும் யூ டியூப் (You Tube) சேனலும் இன்று வெளியிடப்பட்டது.

கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் கையடக்க தொலைபேசி பாவனையின் நவீன பதிப்பின் ஊடாக கணக்குகளை ஆரம்பிக்கக் கூடியதுடன் சந்தை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல் மற்றும் அந்த கணக்கை விரும்பிய இடத்திலிருந்து விரும்பிய நேரத்தில் இலகுவாக பரிசீலிப்பதற்கு வசதிகள் காணப்படுகின்றன.

கொழும்பு பங்குச்சந்தை டிஜிட்டல்மயப்படுத்தப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் இலங்கை உலகளாவிய நிதி மூலஸ்தானமாக நிறுவப்படும்.


1 comment:

  1. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை;

    ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்.

    அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.

    (அல்குர்ஆன் : 30:39)
    www tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.