Header Ads



சுகாதார அறிவுறுத்தல்களை கடைபிடித்து, அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுங்கள் - ஜனாதிபதி


இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பின்னர் சுகாதார அறிவுறுத்தல்களை கடைபிடித்து அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்புடன் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு உதவுமாறு ஜனாதிபதி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் விசேட பதிவொன்றை பதிவிட்டு இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அதிகாலை 5 மணி முதல் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தினமும் அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 10 மணிக்கும் மீளவும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளளது.

அதற்கமைய 66 நாட்களின் பின்னர் முதல் முறையாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.