Header Ads



மனைவியின் கனவில் தோன்றிய, மர்ஹும் பெளசுல் அமீர் (கொட்டராமுல்ல சம்பவத்தின் நெருடல்)

கொட்டாரமுல்ல மர்ஹும் பெளசுல்  அமீரின் மனைவி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

கொட்டாரமுல்லையில் கடந்த வருடம் 2019  இனவாதத் தாக்குதலில் வபாத்தான, பெளசுல்  அமீரின் மனைவி குறித்து அங்குள்ள பிரதேசத்தவர் சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது மர்ஹும் அமீர் சஹீத்தாக்கப்பட்டு, ஒரு வருடத்தை நிறைவு செய்து கொண்டிருந்த நிலையிலேயே, அவரது மனைவி வபாத்தாகியுள்ளார்.

கணவர் எந்த நேரத்தில் மரணித்தாரோ, அதையொத்த சற்று நேரத்திற்கு முன்னதாகவே மனைவியும் மரணமாகியுள்ளார்.

மரணமடைந்த மனைவியின் வயது 32. 

4 குழந்தைகளின் அன்புத் தாய்.

தன்னை முழுமையான பர்தாவுடைய, வாழ்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட இறையச்சம் உள்ளவர்.

வயிற்றில் உருவாகிய கட்டியொன்று, புற்றுநோயாக விஸ்வரூபமெடுத்து, அது குணப்படுத்த முடியாது என வைத்தியர்கள் கைவிரித்தும் உள்ளனர்.

சுமார் 6 மாதங்கள் அவர் இந்த நோயுடன் போராடியுள்ளார்.

மர்ஹும் அமீர் வபாத்தான போது, அங்கு அவருடைய லொறியை வெளியே கொண்டு வருவதில் எப்படி சிரமங்கள் ஏற்பட்டதோ, அதேபோன்று அவருடைய மனைவியின் வபாத்தின் போதும் அதுபோன்று லொறியை வெளியே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அமீரின் மனைவி, தான்  வபாத்தான 01.05.2020 அன்றைக்கு முதல் நாள், ஓரு கனவு கண்டுள்ளார்.

 அதில், கனவில் தோன்றிய மர்ஹும் அமீர், நீ எங்கும் மருந்து எடுக்க போகத் தேவையில்லை. இன்று 01.05.2020  உன்னை நான் அழைத்துக்  கொண்டுப் போவேன் என சொன்னதாக, மனைவி சிரித்துக் கொண்டே பகல் வேளையில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யா அல்லாஹ், மர்ஹும் அமீர் மற்றும் அவருடைய மனைவியுடைய பாவங்களை மன்னித்து விடு. அவர்களுடைய கபுறுகளை ஒளி மயமாக்கு,  அவர்களுக்கு மேலான சுவனத்தை வழங்கிடு, அவர்களுயை பிள்ளைகளுக்கு மன தைரியத்தை வழங்கி, யா அல்லாஹ் நீயே அவர்களுக்கு பாதுகாப்பாளனாக இரு....!

17 comments:

  1. AMEEN AMEEN YAH RABBIL AALAMEEN!

    ReplyDelete
  2. امين يا رب العالمين

    ReplyDelete
  3. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete
  4. Can you share a contact no of this family

    ReplyDelete
  5. Aameen Aameen yarabbal Aalameen

    ReplyDelete
  6. Allah is the protector of all of his creation...
    Ya Allah protect these kids and give them a good replacement of love and hug in their life...
    Habunallahu wannihmal wakeel.....

    ReplyDelete
  7. May almighty Allah bless and bolster all these four innocent children.
    Ya Allah grant these children the fortitude in this world! Make them financially & emotionally stable all through their life. Grant loftiest stations in Jannathul Firdous to their parents and do join them with their parents in Jannathul Firdous ! Aameen.

    ReplyDelete
  8. Aameen yarabal Alameen May Allah bless there kids

    ReplyDelete
  9. யா அல்லாஹ் அவர்கள் இருவரின் பாவங்களையும் மன்னித்து உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவாயாக

    ReplyDelete

Powered by Blogger.