Header Ads



முஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு

பிரபல சிங்கள ஊடகவியளாலர் "கசுன் புஸ்ஸேவல" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து....

நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் செய்பவர்களுக்கு எதிராக செயற்படுவது ஏன் ?

கொழும்புக்கு வெள்ளம் வந்த நேரம் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்

ஒரு நேரத்தில் சேதவத்த உட்பட பல பிரதேசங்களுக்கு 1500  சோற்றுப்பார்சல் தேவைப்பட்டது.

அந்த நேரத்தில் அதை ஏற்பாடு செய்து கொள்வது என்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

உணவு தேவை என்று பேஸ்புக்கிள்  பதிவுக்கு மேல் பதிவுகள் இட்டேன்.

பேர் ஊர் தெரியாத ஒருவர் கதைத்து தெஹிவளை, மற்றும் கொள்ளுப்பிட்டி முஸ்லிம் பள்ளிகளுக்கு 1500 சோற்றுப் பார்சல்களை அனுப்பி வைத்திருந்தார்.

அது மட்டுமல்ல சேதவத்த பெளத்த தஹம் பாசல் மாணவர்கள் 800 பேருக்கு தேவையான வெள்ளை உடைகளையும் வழங்கியிருந்தார்.

இவை அனைத்தையும் செய்தது நான் வாழ்வில் ஒரு முறையேனும் நேரடியாக இதுவரை சந்திக்காத எனது முஸ்லிம் நண்பர் அப்துல் வஜி என்பவராகும்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆசாதரன சூழலினால் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கு கொள்ளுப்பிட்டி முஸ்லிம் பள்ளியினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Safwan Basheer




1 comment:

  1. தர்மம் செய்வது கொடை கொடுப்பது ஒரு பொதுவான பணி. இதனை யாருக்கும் எப்போதும் பாதிக்கப்பட்ட சமூகம் விரும்புகின்றமாதிரி கொடுக்கலாம். இதற்கு சாதியும் இல்லை. மதமும் இல்லை மொழியும் இல்லை. இதற்கு புறம்பாக செய்வது கயமைத்தனம்.

    ReplyDelete

Powered by Blogger.