Header Ads



கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரியாக டொக்டர் அர்ஷாத் காரியப்பர் கடமையேற்பு


கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரியாக டொக்டர் அர்ஷாத் காரியப்பர் அவர்கள் இன்று திங்கட்கிழமை (02) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் முன்னிலையில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், மாநகர சபையின் சட்டப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எம்.இஸ்மாயில், முதல்வரின் இணைப்பாளர் ஏ.சி.சமால்தீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது புதிய பிரதம சுகாதார வைத்திய அதிகாரியான டொக்டர் அர்ஷாத் காரியப்பர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட மாநகர முதல்வர், கல்முனை மாநகர பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கும் உணவு வகைகளின் தரத்தையும் சூழல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

புதிய பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் அவர்களின் வழிகாட்டலில் மாநகர சபை சுகாதாரப் பிரிவு வினைத்திறனுடன் சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்தார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

No comments

Powered by Blogger.