Header Ads



இலங்கையில் புதிய திட்டம் - வரமா சாபமா ??

தாயொருவர் தமது குழந்தை அத்தியவசியமற்றது என கருதும் பட்சத்தில், அந்த குழந்தையை ஒப்படைப்பதற்காக நாடு முழுவதும் 9 மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானிக்கவுள்ளது.

பிறந்தது முதல் ஒரு வயது வரையான குழந்தைகளை குறித்த மத்திய நிலையங்களில் ஒப்படைக்க முடியும் என அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களில், சிசுக்கள் கொலை செய்யப்பட்டதுடன் கைவிடப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலைமையை குறைக்கும் வகையில், சிசுக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளை மத்திய நிலையங்களில் ஒப்படைக்கும் போது, குழந்தையின்பெற்றோரிடம் எந்த காரணங்களும் வினவப்பட மாட்டாது எனவும் பேராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் வளர்ந்தவுடன், அவர்களை சிறுவர் நிலையங்களுக்கு அல்லது குழந்தைகளை தத்தெடுப்போருக்கு சட்டரீதியாக ஒப்படைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமெனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

2 comments:

  1. நல்ல விடையம்!

    ReplyDelete
  2. Good planing otherwise inocent children killed.

    ReplyDelete

Powered by Blogger.