Header Ads



பங்களாதேஸ் அணி சர்வதேச உலக கிண்ணப்போட்டியொன்றில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தமை இதுவே முதல்தடவை

19 வயதிற்கு உட்பட்டவர்களிற்கான அரையிறுதிப்போட்டியில் நியுசிலாந்தினை ஆறு விக்கெட்களால் தோற்கடித்து பங்களாதேஸ் அணி உலக கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி எட்டுவிக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றது.

நியுசிலாந்து அணியின் வீலர் கிறீனல் 75 ஓட்டங்களை பெற்றார். பங்களாதேஸ் அணியின் சொறிவுல் இஸ்லாம் மூன்று விக்கெட்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி நான்கு விக்கெட்களை மாத்திரம் இழந்து தனது வெற்றியிலக்கை எட்டியது. பங்களாதேஸ் அணியின் சார்பில் மஹ்முதுல் ஹசன் ஜொய் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள பங்களாதேஸ் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கின்றது.

பங்களாதேஸ் அணி சர்வதேச உலக கிண்ணப்போட்டியொன்றில்  இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளமை  இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மற்றய அரையிறுதி ஆட்டத்தில் Pakistan 174 allout. India 175/0
    Ind won by 10 wickets

    இறுதிப் போட்டியிலும் வழமைபோல் இந்தியாவிற்கே பெரும் வெற்றி

    ReplyDelete

Powered by Blogger.