Header Ads



சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் 72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு


(அகமட் எஸ். முகைடீன்)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இன்று (4) செவ்வாய்க்கிழமை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வைத்திய கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பை தலைமையில் நடைபெற்றது.

சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை முன்னாள் தலைவர் ஏ.சி.எம். புகாரி மௌலவி, சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய அதிபர் அஸ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல், கிராமசேவை உத்தியோகத்தர் எம்.ஐ. சித்தி பரீதா, சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கலாசாலையின் அதிபர், உஷ்தாதுமார் மற்றும் மாணவர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், பிரதேச சமூர்த்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டதோடு சுதந்திர தின நினைவாக பள்ளிவாசல் வளாகத்தில் மரங்கன்றுகளும் நட்டிவைக்கப்பட்டன. மேலும் அஸ்ஷேஹ் யு.எல். மஹ்ரூப் மதனியினால் இதன்போது விஷேட துஆப் பிராத்தனை நிகழ்த்தப்பட்டது.  

அத்தோடு 72வது சுதந்திர தின நினைவாக பொதுமக்கள் தமது வீடுகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏதுவாக 1000 மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன. 



No comments

Powered by Blogger.