Header Ads



ஆர்ப்பாட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட பிரத்தியேக இடத்தில் இன்று 7 போராட்டங்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவென கோட்டை பொலிஸ் பிரிவில் காலி முகத்திடலுக்கு முன்பாக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இன்று மட்டும் சுமார் 10 வரையிலான ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன. 

உளவுப் பிரிவால் சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய அந்த எண்ணிக்கை தொடர்பில் கணக்கிடப்பட்ட போதும் இன்று மட்டும் அந்த பிரத்தியேக இடத்தில் 7 ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டதாக  அந்த அலுவலம் உறுதி செய்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களின் பேரணிகள், கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் அருகே உள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மைதானத்தை வந்தடைந்து 

அங்கு கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இதனால் ஜனாதிபதி செயலகம் முன்பான காலி வீதி பகுதியூடான வீதி உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தொள்பொருள் சார் ஊழியர்கள், ரயில்வே தொழிற்சங்கம், பட்டதாரிகளின் தேசிய அமைப்பு,  வீடமைப்பு அதிகார சபையின் ஊழியர்கள், விஷேட  திட்ட உத்தியோகத்தர்கள், ஒன்றிணைந்த வேலை இல்லா பட்டதாரிகளின் இரு வேறு தொழிற்சங்கங்கள்,  வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஆகியோரே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

No comments

Powered by Blogger.