Header Ads



புனித அல்குர்ஆனை சோசலீசத்திற்கு ஏற்றவாறு மாற்றியெழுத சீனா திட்டம்

Aashiq Ahamed

குர்ஆனையும், பைபிளையும் சோசியலிச தத்துவங்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுத சீனா முடிவெடுத்திருப்பதாக பிரிட்டனின் டெய்லிமெயில் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இது உண்மையென்றால், அறிவுக்கு பொருந்தாத இம்மாதிரியான காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக சோவியத் ரஷ்யாவை நினைவுக்கு கொண்டு வருவது சீனாவிற்கு நல்லது.

சோவியத் உடைந்த போது, அதிலிருந்து பிரிந்த பல நாடுகள் இஸ்லாமின் பக்கம் திரும்ப வந்தன. இன்றைய ரஷ்யாவும் கூட இஸ்லாமிற்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட்டு அரவணைத்து செல்வதில் கவனம் செலுத்துகிறது. சோவியத் காலக்கட்டத்தில் இடிக்கப்பட்ட ஆயிரகணக்கான மசூதிகளை இன்றைய ரஷ்யா புணரமைத்து கொடுத்திருக்கிறது. 8,000-த்திற்கும் அதிகமான மசூதிகள் இன்று ரஷ்யாவில் இருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 76% ரஷ்யர்கள் இஸ்லாம் குறித்து நன்மதிப்பை கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களை தவிர்த்து மாஸ்கோவின் பொருளாதாரத்தை கணக்கிட முடியாது என மாஸ்கோ மேயர் குறிப்பிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

இஸ்லாமிற்கு எதிரான அடக்குமுறைகள் சிறிதளவு கூட ஆதாயத்தை கொடுத்ததில்லை என்பது வரலாறு உணர்த்தும் செய்தி. குர்ஆன் என்பது காகிதங்களில் இல்லை, அது மக்களின் மனங்களில் இருக்கிறது. என்ன முயற்சி செய்தாலும் அது திரும்ப வந்துவிடும். ஆகையால் இம்மாதிரியான முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்த்துவிட்டு அரவணைத்து செல்வதில் சீனா கவனத்தை செலுத்தினால் நன்மை இருக்கும்.


10 comments:

  1. அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).
    (அல்குர்ஆன் : 14:1)

    நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
    (அல்குர்ஆன் : 15:9)

    www.tamililquran.com

    ReplyDelete
  2. இது இறைவனின் வேதம் . இதனை எவ்வாறு பாதுகாப்பது என்பது அவனது தீர்ப்பிலுள்ளது.கஃபாவை அழிக்க ஆப்ரஹா யானைப் படையுடன் வந்த போது அப்துல் முத்தலிப் கூறிய வாசகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. உத்தரவாதம் இரண்டுவருடம்தான்

    ReplyDelete
  4. Let's see what will the so called Arab countries do about this.

    ReplyDelete
  5. Time has come to think offensive rather than defensive.

    ReplyDelete
  6. Dear Brothers and sisters of Islam
    we do not need to bother about this news and aim of chinese goverenment to rewrite the Al Quran.
    Almighty allah knows how to safe guard his quran and islam.
    and he will.wait and see whole china will revert back to Islam before its government complete rewriting the Al Quran.

    ReplyDelete
  7. No one can do anything don't worry.

    ReplyDelete
  8. மேலத்தேய நாடுகள் நாடுகள் சீனாவின் வளர்ச்சியால் நிலைகொள்ள முடியாமல் தடுமாறுகின்றதன் வீழைவுதான் இந்த மேற்கத்திய ஊடகத்தின் ஓலம். சீனா அந்த அலவு முட்டால் இல்லை.

    ReplyDelete
  9. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (Al Qura'an 9:32)

    ReplyDelete

Powered by Blogger.