Header Ads



கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், விடுத்துள்ள அறிக்கை

மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் நிதியுதவி உடன்படிக்கை சம்பந்தமாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் ஏனைய கூட்டணி நாடுகள் செயற்படுத்தும் கொள்கைக்கு அமைய, பிரதான நிதியுதவி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கம் அதற்கு அனுமதியை பெற நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

அப்போது உடன்படிக்கையை மீளாய்வு செய்ய நாடாளுமன்றத்திற்கு போதுமான சந்தர்ப்பம் கிடைக்கும். மீளாய்வு செய்யப்படும் இந்த காலத்திற்குள் போக்குவரத்து, காணி நிர்வாகத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த பிரதான நிதியுதவி உடன்படிக்கை மூலம் இலங்கையில் 11 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக பலனடைவார்கள் என்பதுடன் பொருளாதார வளர்ச்சியானது அர்த்தமுள்ள உத்வேகத்தை பெறும்.

மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கைக்கு அரசாங்கம் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியம் எனவும் அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

3 comments:

  1. Any sort of USA’s involvements SL’s matters are mostly welcomed by all Sri Lankan people

    ReplyDelete

Powered by Blogger.