Header Ads



சஜித்திற்கு வந்த பிரசார நிதி விரயம் செய்யப்பட்டதா..? திஸ்ஸ பொறுப்புக்கூற வேண்டும் - அகிலவிராஜ்

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புடைய முக்கிய விவகாரங்கள் அனைத்தும் கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள பிரசாரக் காரியாலயத்திடமே பொறுப்பளிக்கப்பட்டிருந்ததுடன், அதன் பிரதான ஒருங்கிணைப்பாளராக திஸ்ஸ அத்தநாயகவே பெயரிடப்பட்டிருந்தார். 

எனவே பிரசார நிதி வீண்விரயம் செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து அவரிடமே விளக்கம் கோரவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருக்கிறார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கட்சியின் தலைமை நிர்வாகிகளால் போதியளவான நிதி பெற்றுக்கொள்ளப்பட்டதா, அவை முறையாக ஒதுக்கப்பட்டதா, அநாவசியமான செலவுகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது உள்ளிட்ட கேள்விகள் உள்ளன. அவையும் சஜித் பிரேமதாஸவின் தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் இன்று -20- வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

1 comment:

  1. Appave sonnome gentlemen... dont take this snake....but no one hear

    ReplyDelete

Powered by Blogger.